சென்னை, அக்.12
படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான பி.விஜய ரெட்டி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.
இவருக்கு மனைவி தமயந்தி. மகன்கள் திரிநாத் ரெட்டி, நாகி ரெட்டி, மகள்கள் நாகலட்சுமி, சியாமளா உள்ளனர்.
1970ல் ‘ரங்க மஹால் ரகஸியா’ என்னும் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அது சூப்பர்ஹிட் ஆனது. தொடர்ந்து வெற்றிப் படத் தயாரிப்பாளர், இயக்குனரானார். விட்டலாச்சார்யாவின் ‘மனதும்பிடஹென்னு’ படத்திலிருந்து அவரது சினிமா வாழ்க்கை துவங்கியது.
கன்னட பிரபல நடிகர். டாக்டர் ராஜ்குமாரோடு இணைந்து மயூரா, ஹூலி ஹாலின மேவு, சீனிவாச கல்யாணம், பக்த பிரகலதா ஆகிய பக்திப் படங்களையும், ஷனாதி ஆப்னா, நா நின்னே மரேயலாரே… ஆகிய சமூகப் படங்களையும் எடுத்தவர். கிருஷ்ணா, காந்தா ராவ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கியவர்.
கன்னடத்தில் 40 படங்கள், இந்தியில் 17 படங்கள், தெலுங்கில் 6 படங்களை இயக்கி தயாரித்திருக்கிறார்.