செய்திகள்

10 நாளாக காணாமல் போன 5 இந்திய ராணுவ வீரர்களை இன்று ஒப்படைக்கிறது சீனா

லடாக், செப். 12-

காணாமல் போன 5 இராணுவ வீரர்களை சீனா இன்று ஒப்படைக்க உள்ளது.

செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக சீனா பக்கத்திற்குச் சென்ற 5 இந்திய வீரர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை சீன ராணுவம் இரண்டு நாள்கள் முன் உறுதிப்படுத்தியது. அவர்கள் விரைவாக முறைப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்களை, இன்று சீன இராணுவம் ஒப்படைக்க உள்ளதாகவும், இந்த ஒப்படைப்பு இன்று எப்போது வேண்டுமானாலும் நியமிக்கப்பட்ட இடத்தில் நடைபெறும் என்று மத்திய அமைச்சரும், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.யுமான கிரேன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *