செய்திகள்

14–ந் தேதி அண்ணாநகரில் குழந்தைகள் தின யோகாசன போட்டி

Spread the love

சென்னை, நவ. 8–

சென்னை அண்ணாநகரில் 14–ந் தேதி குழந்தைகள் தின யோகாசன போட்டி நடைபெறுகிறது.

14–ந் தேதி குழந்தைகள் தின விழாவையொட்டி சென்னை மாவட்ட யோகா வளர்ச்சி சங்கம் மற்றும் வாழ்க்கை சக்தி உலக யோக மையம் இணைந்து நடத்தும் 13–வது மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா மற்றும் குழந்தைகள் தின யோக விழா அண்ணாநகர் ரவுண்டனா, ஐயப்பன் கோவில் அருகில் உள்ள அண்ணாநகர் மாதர் சங்க கட்டிடத்தில் 14–ந் தேதி வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சி சங்க நிறுவனர், செயலாளர் ஜி.டி. அன்பரசன் வரவேற்புரையாற்றுகிறார். ஸ்ரீ மனோ யோகாச்சாரியார் தலைமை தாங்குகிறார்.

யோகா போட்டியை அண்ணாநகர் மாதர் சங்க கனகா மேனன், முகப்பேர் உள்ளொளி ஓகக்கலை ஆய்வு மைய நிறுவனர் கிருபானந்தன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் யோகா போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாதர் சங்க தலைவி மீரா சங்கரமூர்த்தி, மூத்த திரைப்பட நடிகை கே.ஆர்.ரங்கம்மா ஆகியோர் பரிசுகள் வழங்குகின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை யோகா சங்க நிறுவனர், செயலாளர் ஜி.டி.அன்பரசன், மாவட்டத் தலைவர் பி.சுரேஷ்குமார், மாநிலத் தலைவர் ஜெ. ரகுகுமார், கவுரவ ஆலோசகர் ஸ்ரீ மனோ யோகச்சாரியார், துணை செயலாளர் ஆர்.தயாளன், எம்.தண்டபாணி ஆகியோர் செய்து வருகின்றனர். ஏ.அகஸ்தீஸ்வரன் நன்றி கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *