போஸ்டர் செய்தி

2 வது மாடியிலிருந்து தூக்கி வீசி குழந்தை கொலை: சித்தி கைது

Spread the love

சென்னை, அக். 10–

கணவரின் முதல் மனைவியின் குழந்தையை 2வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த சித்தியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது மகள் ராகவி மற்றும் 2வது மனைவி சூர்யகலா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுமி ராகவி, 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பார்த்திபனின் 2வது மனைவி சூர்யகலா, ராகவியை மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சூர்யகலாவை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *