செய்திகள்

108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

Spread the love

காஞ்சீபுரம், டிச. 3–

வேடல் கிராமத்தைச் சேர்ந்த ராஜுவின் மனைவி அஸ்வினி (26). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். வரும் வழியில் ராஜகுளம் கிராமம் அருகே அப்பெண்ணுக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.

ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் நா.பூபாலன், ஓட்டுநர் சந்தானம் ஆகியோர் உதவியுடன் அந்தப் பெண்ணை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *