செய்திகள்

சென்னை சில்க்ஸ் குரூப் நிர்வாக இயக்குனர் டி.கே.சந்திரனின் ‘அறக்கயிறு’ அனுபவ நூல்

சென்னை சில்க்ஸ் குரூப் நிர்வாக இயக்குனர் டி.கே.சந்திரனின் ‘அறக்கயிறு’ அனுபவ நூல்

தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா வெளியிட்டார்

சென்னை, அக். 17–

சென்னை சில்க்ஸ் குரூப் நிர்வாக இயக்குனர் டி.கே.சந்திரன் எழுதிய ‘அறக்கயிறு’ அனுபவ கட்டுரைகள் நூலை மதுரையில் கோச்சடை அருகே, ஹெரிட்டேஜ் ஓட்டலில் நடைபெற்ற விழாவில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வெளியிட்டார். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படிப்படியாக வளர்ந்து உலக பிரபல நிறுவனமாக சென்னை சில்க்சை உருவாக்கியதற்காக டி.கே.சந்திரனை பாராட்டினார்.

விழாவில் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். பவா செல்லதுரை நூல் பற்றி அறிமுகம் செய்தார்.

எந்தவித பரபரப்பு பந்தா இல்லாமல் நிதானமாக செயல்படுபவர் சென்னை சில்க்ஸ் டி.கே.சந்திரன் ஆவார். கவர்ச்சி வார்த்தைகள் எதுவும் அவரிடம் கிடையாது. போனில் அழைத்தால், அவரே போன் எடுப்பார். எந்த பிரச்சினையிலும் ஒளி மறைவின்றி தீர்வு சொல்லக் கூடியவர் ஆவார்.

எஸ்.சி.எம்.குரூப் நிர்வாக இயக்குனராக டி.கே.சந்திரன் (வயது 64 ) செயல்படுகிறார். இந்த குரூப்பின் முக்கிய நிறுவனமாக சென்னை சில்க்ஸ் அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் பட்டு மற்றும் ஜவுளி விற்பனையில் தலைசிறந்து விளங்குகிறது. ரூ.3000 கோடி டெக்ஸ்டைல், ரெடிமேட் தயாரிப்பு, விற்பனை ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது. இதன் ஜூவல்லரி பிரிவும் சிறப்பாக செயல்படுகிறது. உலக அளவில் இதன் ரெடிமேட் ஆடைகள் பிரபலமாகி உள்ளது.

சென்னை சில்க்ஸ் குரூப் நிர்வாக இயக்குனர் டி.கே.சந்திரனின் தந்தை ஏ.குழந்தைவேல் முதலியார் மதுரையில் 1962–ம் ஆண்டில் சிறிய ஜவுளி கடை துவங்கி, காதி, கைத்தறி ஜவுளி விற்பனை செய்து வந்தார். படிப்படியாக வளர்ந்து சொந்த முயற்சியில் எந்தவித நிதி உதவி இன்றி இந்த ஜவுளி கடை வளர்ச்சி பெற்றது. சொந்த முதலீடு எந்தவித தடை இன்றி, துணிச்சலாக வளர்ச்சி பெற உதவியது. சுதந்திரமாக செயல்பட்டதால், சென்னை சில்க்ஸ் பிரமாண்ட வளர்ச்சி பெற்றது என்றார் டி.கே.சந்திரன்.

டி.கே.சந்திரன் மதுரையில் 1974–ம் ஆண்டில் நாகமலை புதுக்கோட்டை வெள்ளச்சாமி நாடார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம்., படித்தவர் ஆவார்.

அந்த கல்லூரியில் தற்போது முன்னாள் மாணவர் சங்கத் தலைவராகவும் உள்ளார். அதன் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். மக்கள் குரல் – டிரினிட்டி மிரர்’ செயல் இயக்குனர் ஜீவானந்தமும் அவருடன் படித்த சக மாணவர், தற்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய இடங்களில் கிளை உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் சென்னை சில்க்ஸ் குரூப்களை நிறுவ திட்டம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *