செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் போலீஸ் கமி‌ஷனர் சந்திப்பு

Spread the love

சென்னை,பிப்.15–

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து போலீஸ் கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்றிரவு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால் மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஆகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் சிலரை கைது செய்தனர். அப்போது போராட்டம் தீவிரமானது.

அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்து விட்டனர். கூடுதல் ஆணையர் தினகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கேட்டுக்கொண்டார். ஆனாலும் போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிடவில்லை.

இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். போலீசாரின் தடியடியை கண்டித்து சென்னையில் பல பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இன்றும் பல மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எதற்காக தடியடி நடத்தப்பட்டது என்பதற்கான காரணத்தை விளக்கி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *