வர்த்தகம்

சென்னை பெட்ரோலியம் நிறுவிய 55வது ஆண்டு விழா: நிர்வாக இயக்குனர் எஸ்.என். பாண்டே ஊழியருக்கு நன்றி

சென்னை, டிச.31–

சென்னை பெட்ரோலியம் 55 வது தினத்தையொட்டி இதன் நிர்வாக இயக்குனர் எஸ்.என். பாண்டே ஊழியர்களை வாழ்த்தினார்.

பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இயங்க, பொது முடக்க சமயத்தின் போது கடுமையாக உழைத்த ஊழியர்களை பாராட்டினார். சிபிசிஎல் ஊழியர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் எஸ்.எம்.வைத்யா வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

இதன் நிதி இயக்குனர் ராஜீவ் அயிலவாடி பேசுகையில், சவாலான காலங்களில் தடையின்றி பெட்ரோலிய பொருட்கள் வழங்குவதைப் பராமரித்த ஊழியர்களைப் பாராட்டினார். ஆலை பணி இயக்குனர் எஸ்.கிருஷ்ணன், கடந்த காலங்களில் பல மைல்கல் சாதனைகளை குறிப்பிட்டு நினைவு கூர்ந்தார்.

சிபிசில் திட்ட இயக்குனர் எச்.சங்கர் துவக்கக் காலத்தில் ஆலை துவங்குவதற்கான பணி இலக்குக்கு முன்பே செயல்படுத்தியதை பாராட்டினார்.

அதிகாரிகள் சங்க தலைவர், மற்றும் ஊழியர்கள் சங்க தலைவர் பாராட்டி பேசினர். தலைமை பொது மேலாளர் மனித வளம் எம்.தமிழ்முதல்வன் வரவேற்றார். ஐசக் நன்றியுரை நிகழ்த்தினார். ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஜூம் தளத்தில் நடந்த கொண்டாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *