செய்திகள்

டுவிட்டரில் தகவல் பரிமாற்றத்தில் சென்னை முதல் இடம்

சென்னை, செப். 18–

சமூக வலைதளமான டுவிட்டரில், கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், இந்தியாவில் மக்கள் தங்கள் தகவல்களை உறவினர், நண்பர்களிடம் பரிமாறிக் கொள்ள டுவிட்டர் தளத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதில் சென்னை நகரம் முதல் இடம் பிடித்துள்ளது என ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள், உணவு, வானிலை போன்ற தகவல்களை அதிக அளவில் பயன்படுத்தினர். இந்தியாவில் 22 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 8 லட்சத்து 50 ஆயிரம் டுவிட்டர் தகவல்களை பற்றி செய்த ஆய்வில் நகைச்சுவை உரையாடலில் சென்னை முதல் இடம் பிடித்துள்ளது.

குடும்பம் பற்றிய தகவலில் சென்னை 2வது இடம் பிடித்துள்ளது. விளையாட்டுகளில் முதல் 3 நகரங்களில் ஒன்றாக சென்னை இடம் பிடித்தது என்றும் ‘குவில்ட்.ஆல்’ ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *