செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி தூர் வாரும் பணி: கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்தார்

Spread the love

காஞ்சீபுரம், செப். 12–

காஞ்சீபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரி தூர் வாரும் பணியை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா துவைக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

செம்பரம்பாக்கம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் மொத்தம் நீர் பரப்பு 2316 எக்டேர். தற்போது ஏரியின் மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடி நீரில் 536 மில்லியன் தூர்ந்து போய் மண் உள்ளது. இந்த ஏரியை தூர் வாரி ஆழப்படுத்த தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஏரி தூர் வாரும் பணி 151.80 லட்சம் கன மிட்டர், ஏறக்குறைய ரூ. 25.30 லட்சம் லாரி மணல் லோடுகள் எடுத்து செல்லப் படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்கும் வகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *