செய்திகள்

மண்டலப் பொறுப்பாளர்களுக்கு மாவட்டங்கள் மாற்றம்: எடப்பாடி – ஓ.பி.எஸ். அறிவிப்பு

சென்னை, நவ.22–

மண்டலப் பொறுப்பாளர்கள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் சில மாற்றங்கள் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளையும், கழகப் பணிகளையும் விரைவுபடுத்தும் வகையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சில மாற்றம் செய்யப்படுகிறது.

மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு மதுரை புறநகர் மேற்கு, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்கள் ஒதுக்கப்படுகிறது.

மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் கடம்பூர் சி.ராஜூவுக்கு தென்காசி வடக்கு (கடையநல்லூர், சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிகள்) மாவட்டம் ஒதுக்கப்படுகிறது.

இத்தகவலை அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *