சிறுகதை

மாற்றம்

சிங்காரவேலர் செயின் ஸ்மோக்கர்.
எப்போதும் சிகிரெட்டும் கையுமாகவே இருப்பார். அவர் அருகில் சென்றால் ஒரு விதமான நாத்தம் அடிக்கும். அலுவலகம் வரும் போது, எத்தனை சிகரெட்டுகளைக் குடிப்பார், எத்தனை தடவை புகையை நுரையீரலுக்குள் இழுப்பார் என்பது அவருக்கே கணக்குத் தெரியாது உள்ளுக்குள் இழுக்கும் புகையை சுவாசத்தோடு கலந்து புகுத்துவார்.
சிங்காரம்
“ம்”
நீங்க செய்றது சரியில்லீங்க.
ஏன்? புகையும் வாயோடே எதிர்பதில் சொல்வார்.
“இப்படி சிகிரெட் குடிச்சா ஒடம்பு என்னத்துக்கு ஆகும். கொஞ்சம் விட்டுத்தான் பாருங்களேன்’’
என்ன அன்பு அட்வைஸா?
“இல்ல சிங்காரம், இது அடவைஸ் இல்ல. ஒங்க மேல இருக்கிற அக்கற.
“ஓ. கோ, அக்கற. என்னோட உசுரே விடச் சொல்லுங்க விடுறேன்., குடிக்கிற சிகரெட்ட மட்டும் விடச் சொல்லாதீங்க. என்னால முடியாது,
‘‘யார் சொன்ன கேப்பீங்க சிங்காரம்’’,
நான் யார் சொன்னாலும் கேக்க மாட்டேன்.என்றார் சிங்கார வேலர்.
எதுபற்றியும், யார் சொல்லியும் அவர் கேட்பதில்லை, அவருடைய ராஜ்ஜியம், உகலம், தனி. சந்தோசத்திற்கு தடையாய் இருக்கும் எதையும் அவர் தன் அருகில் வைத்துக் கொள்வதில்லை.
அலுவலகத்தில் வௌிப்புறத்தில் மட்டும் தான் இப்படி இருப்பார். வீட்டிற்குள் நுழைந்தால், அவரின் பிறவி தனிப்பிறவி ஆகிவிடும். எதுவும் தெரியாதது போல் நடந்து கொள்வார்.
இந்தப் பூனையும் பால்க்குடிக்குமா? என்ற பரிதாபத் தோரணையிலேயே இருப்பார். வௌியில் செய்யும் தவறுகளை வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்க மாட்டார்.
சிகிரெட்டின் நெடி கொஞ்சம் கூட தன் உதட்டிலும் உடையிலும் ஒட்டாமல் பார்த்துக் கொள்வார்.
“அப்பா”
“ம், சொல்லுடா”
“நீங்க சிகரெட், தண்ணி, பாக்கு, அப்படி இப்படின்னு ஏதாச்சும் போத வஸ்து சாப்பிட மாட்டீங்களே”
“ம்”….. இல்லையேடா”
“குட் …. யூ ஆர் எ குட் பாதர்டூ மீ மகன் நவீன் சொல்லுக்கு கொஞ்சங்கூட தவறில்லாமல்ப் பேசுவார்.
செய்யும் தவறுகளை வீட்டிற்குத் தெரியப்படுத்தாமலே செய்வார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரின் நடவடிக்கைகளில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது.
என்ன சிங்காரம் முன்ன மாதிரி நீங்க இப்ப சிகரெட் பிடிக்கிறதில்ல போல,
“ஆமா”
“ஏன்?”
“சொல்ல முடியாது”
“இல்லங்க நீங்க ஒரு செயின் ஸ்மோக்கர் . அட்வைஸ்யார். சொன்னாலும் கேக்க மாட்டீங்க. எப்படின்னு எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கே. சொல்றீங்களா? விடாப்பிடியாகக் கேட்டார், உடன் பணிபுரியும் ராமன்,
“சொல்லன்னா விடுங்களேன், ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்க?
சிங்காரத்திற்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது.
இப்பத்தான் நீங்க முழு மனுசனா இருக்கீங்க சிங்காரம். யார் எது சொன்னாலும் கேக்காத நீங்க ஒடனே இப்படி முழுசா மாறுனது ரொம்ப சந்தோசம் எது எப்படியோ ஒங்க கையிலிருந்த சிகரெட் கீழ் விழுந்தது ரொம்ப சந்தோசம்.
உடனிருக்கும் பாலு சொல்ல, சிங்கார வேலரால், அடக்கிக்கொண்டு வந்த அழுகையை அடக்க முடியவில்லை. விம்மி, விம்மி அழுதே விட்டார்.
சிங்காரம் நீங்க சொல்ல வேணாம் . அதுக்கு போயி நீங்க ஏன் சின்னப்புள்ள மாதிரி தேம்பி தேம்பி அழுறீங்க, “
“இல்ல பாலு. இது வரைக்கும் நான் செஞ்ச தப்பு வீட்டுக்கு தெரியாது, அப்படித்தான் நானும் நடித்திருக்கேன். ஆனா, ஆனா, மேலும் தேம்பினார். நேத்து மறந்துபோய் என்னோட பாக்கெட்ல சிகரெட் பாக்ஸ வச்சுட்டுப் போயிட்டேன்.
“அப்பெறம் “
சட்டையை கழட்டி போட்டுட்டு தூங்கிட்டு இருக்கேன். எங்கிருந்தோ சிகரெட் வாசன இது எங்க இருந்து இப்படி வருதுன்னு பாத்தேன். பாத்தா என்னோட பையன் அன்பு, சிகரெட் புடிச்சிட்டு இருக்கான். நான் வச்சுருந்த தீயே என்னோட புள்ளைக்கே கொள்ளியாயிருச்சு, நாம பண்ற தப்பு தான், நம்ம புள்ளைங்கள, குடும்பத்த கெடுக்குதுன்னு நெனைக்கும் போது எவ்வளவு கொடுமையா இருக்கு இந்த ஒலகத்தில ஒவ்வொரு தகப்பனும் தன்னோட புள்ளைங்களுக்கு ஒரு வழிகாட்டியாரோல் மாடலா, இப்படித்தான் இருக்கணுமே யொழிய தப்பா வழிக்கு கூட்டிட்டு போகக் கூடாது. என்னைக்கு என்னோட புள்ள என்னையப் பாத்து கெட்டுப்போகனும்னு நெனச்சானோ அன்னைக்கே தூக்கி போட்டுட்டேன் இந்த சிகரெட் கருமாந்திரத்த என்றார் சிங்கார வேலன்
அப்ப, ஒன்ன திருத்துற சக்தி ஒன்னோட வீட்டுலயே இருந்திருக்கு சிங்காரம். உடனிருப்பவர்கள் சொல்லும் போது உச்சி குளிர்ந்தார் சிங்கார வேலர்
அப்போது அங்கு சிகரெட் புகை வௌி வந்து கொண்டிருந்தது.
நான் சிகரெட் குடிக்கிறது என் வீட்டுக்கு தெரியாது என்று ஒருவர்சொன்ன போது, சிங்கார வேலர் சிரித்தபடியே அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
ராஜா செல்லமுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *