வர்த்தகம்

“பொருளாதாரத்தில் மாற்றம்” கருத்தரங்கு: மாணவர்கள் சொந்தமாக தொழில் துவங்க வலியுறுத்தல்

செயின்ட் பீட்டர்ஸ் வணிக நிர்வாக இயல் கல்லூரி சார்பில்

“பொருளாதாரத்தில் மாற்றம்” கருத்தரங்கு:

மாணவர்கள் சொந்தமாக தொழில் துவங்க வலியுறுத்தல்

சென்னை, நவ. 20

செயின்ட் பீட்டர்ஸ் வணிக நிர்வாக பொருளாதார கல்லூரி சார்பில் ஒரு நாள் தேசிய இ–காமஸ் கருத்தரங்கு, “வணிக, பொருளாதார சூழ்நிலையில் ஏற்படும் மாற்றம்” என்ற தலைப்பில் ஆன்லைனில் நடைபெற்றது. இதில் 350 பேர் பங்கேற்றனர். வணிக நிர்வாக கல்வித் துறை தலைவர் எம். உமாரமணன் வரவேற்றார்.

செயின்ட் பீட்டர் உயர் கல்வி ஆராய்ச்சி இன்ஸ்டியூட் துணை வேந்தர் பி. தனஞ்செயன் துவக்கி வைத்து தலைமை வகித்து பேசினார். கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி விவரித்தார்.

இதன் பதிவாளர் எல். மகேஷ்குமார், சிறு நிறுவனங்கள் இந்த பிரச்சனையிலிருந்து மீள வேண்டிய அவசியம் பற்றி பேசினார். வணிகம் எவ்வாறு மாறி வருகிறது என்று மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிறுவனத்தின் கலை, விஞ்ஞான, நிர்வாக கல்வியின் டீன் மேஜர் எம். வெங்கட்ரமணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலையும், இக்கருத்தரங்குக்கு பொருளும் ஒன்றாக உள்ளது என்றார்.

வணிகத் துறை உதவிப் பேராசிரியர் சி. விஜி தலைமை விருந்தினரை அறிமுகம் செய்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணை வேந்தர் என். பஞ்சநாதம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணை வேந்தர் என். பஞ்சநாதம் சிறப்பு சொற்பொழிவாற்றினார். வளரும் இளம் சொந்த தொழில் அறிஞர்களாக உள்ள வாய்ப்புகள் பற்றி விவரித்தார். இக்கருத்தரங்கின் நோக்கம் பற்றி பேசுகையில், எப்படி பொருளாதாரத்தை சீரமைத்து மீட்பது என்று விளக்கினார்.

இந்தக் கல்லூரியின் கார்ப்பரேட் செகரட்டரி வங்கி நிர்வாக துறை தலைவர் எஸ். ஸ்மைலி போஸ் நன்றி தெரிவித்தார்.

48 ஆராய்ச்சியாளர்கள்

இக்கருத்தரங்கில் 48 ஆராய்ச்சியாளர் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டனர்.

கொச்சி ராஜகுமாரி கல்லூரி பேராசிரியர் ஜெயஸ்ரீ இந்திரன், புனே ஏ. எஸ். எம். குரூப் கல்லூரி பேராசிரியர் மோஷின் ஷேக் ஆகிய தொழில்நுட்ப கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர்.

காமர்ஸ் துறை தலைவர் எஸ். பன்னீர்செல்வம் நிறைவு கருத்தரங்கில் வரவேற்றார்.

இதன் முன்னாள் துணை வேந்தர் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு டைரக்டர் டி.எஸ். ராமச்சந்திர மூர்த்தி தலைமை வகித்தார். ஆராய்ச்சி வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆராய்ச்சி மேம்பாடு துறை டீன் எஸ். சேகரன் பேசுகையில், ஆராய்ச்சிப் பிரிவில் முறையாக குறித்த நேரத்தில் திட்டமிட்டபடி ஆராய்ச்சியை முடிக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

பொருளாதாரத் துறை தலைவர் ஆர். அனுராதா சிறப்பு விருந்தினர், மும்பை நிதி திட்டமிடல் அகாடமி டைரக்டர் தனுஜ் போதாரை அறிமுகம் செய்தார்.

தனுஜ் போதார்

தனுஜ் போதார் பேசுகையில், மத்திய அரசு பல்வேறு வாய்ப்புகள், சலுகைகள் வழங்கி, மாணவர்கள் சொந்தமாக தொழில் துவங்க திட்டங்கள் அறிமுகம் செய்ததை விளக்கி, மாணவர்கள் சொந்த தொழில் துவங்க வரவேண்டும் என்றார். வணிகத் துறை உதவி பேராசிரியர் நடராஜன் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *