போஸ்டர் செய்தி

வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி: மத்திய அரசு முடிவு

Spread the love

புதுடெல்லி, நவ. 9–

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் துபாய், எகிப்தில் உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பருவம் தவறிய மழையால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கடுமையான விலை உயர்ந்தது. தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு மேல் விற்றது. பல மாநிலங்களில் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை ஆகிறது. இதையடுத்து வெங்காயத்தின் தட்டுப்பாட்டை போக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி வருகிற 30-ந்தேதி வரை வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து துபாய், எகிப்து, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வெங்காயங்களை ஏற்றிய முதல் கப்பல் வருகிற 15-ந்தேதி வர வாய்ப்பு உள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் துபாயில் இருந்து 2 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய டெண்டரை வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *