“பயணிகளின் கனிவான கவனத்திற்கு சென்னை எக்மோரில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது நடைமேடைக்கு வந்து சேரும் என்று பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு, எக்மோர் ரயில்வே நிலையத்தில் இருந்தவர்களையெல்லாம் துரிதமாகச் செயல்பட வைத்தது. ” இன்னும் கொஞ்ச நேரத்துல டிரெயின் வந்துரும். எல்லா பொருளையும் எடுத்து வையுங்க” எத்தனை பை கொண்டு வந்தீங்க? அந்த வாட்டர் பாட்டில எடுத்து உள்ள வை. சாப்பாடு வாங்கிட்டு வரலாமா? இல்ல டிரெயின்ல […]