அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

கல்லறை…! – ராஜா செல்லமுத்து

அறைகள் சொல்லும் கதைகள்-31 விரிந்து பரந்து கிடந்த அந்தக் கல்லறைத் தோட்டத்தில் பூபதி முருகனின் கல்லறை இருந்தது. அத்தனை அழகிய வேலைப்பாடுகள் .சுற்றிலும் பூந்தோட்டம் .அது கல்லறை என்று சொல்வதை விட இன்னொரு தாஜ்மஹால் என்று சொல்லலாம். அந்த கல்லறைக்கு வருபவர்கள் எல்லாம் பூபதி முருகனின் கல்லறை அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள தயங்க மாட்டார்கள் . “என்ன கல்லறையில போயா போட்டோ எடுக்கிறது? இது நல்லா இல்லையே ? “ என்று யாராவது சொன்னால் […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

வளர்ப்பு பிராணி அறை – ராஜா செல்லமுத்து

அறைகள் சொல்லும் கதைகள்- 28 அத்தனை அவசரத்தில் ஒரு நாயைத் தூக்கி வந்திருந்தாள் சோபனா. அதை நாய் என்று சொல்வதை விட தன் பிள்ளை என்று தான் சொல்லுவாள். அந்த நாய்க்கு அவள் வைத்திருக்கும் பெயர் சோபி. தன் பெயரை போலவே நாயும் இருக்க வேண்டும் என்று தன் பெயரையே அந்த நாய்க்கு வைத்திருந்தாள். அவள் அழுகையும் கண்ணீருமாக இருப்பதைப் பார்த்த அந்த மருத்துவமனையில் அவசரமாக அவசரச் சிகிச்சையில் சேர்த்தார்கள் .உடம்பில் ஆங்காங்கே அடிபட்டு இருந்ததற்கான அடையாளம் […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

புத்தக அறை…! – ராஜா செல்லமுத்து

அறைகள் சொல்லும் கதைகள்-26 அவ்வளவாகப் படிக்காத அர்ச்சனாவிற்கு படித்த மாப்பிள்ளையாக ராஜேந்திர பிரசாத் வந்து வாய்த்தார். இருவருக்கும் எப்போதும் இரண்டாம் பொருத்தமாகத் தான் இருக்கும். அவர் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து குளித்துவிட்டு அலுவலகம் செல்வதற்குள் அர்ச்சனாவிடம் ஆயிரம் தடவை சண்டை போட வேண்டி இருக்கும். பற்றாக்குறைக்குப் பிள்ளைகளின் பிடுங்கல் வேறு. ” ஏன் இந்த அர்ச்சனாவைத் திருமணம் செய்து கொண்டோம் என்று சில நேரங்களில் தலையில் அடித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார் ராஜேந்திர பிரசாத் . […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

பணிப்பெண் அறை…! – ராஜா செல்லமுத்து

அறைகள் சொல்லும் கதைகள்- 25 ஆயிரங்கால் மண்டபத்தைப் போல் விரிந்து பரந்த வீடு. நட்சத்திரங்களைப் போல் மின்னிக் கொண்டிருக்கும் மின்சார விளக்குகள் .ஆடம்பரத்தின் ஆணிவேர் போல் அமைந்திருந்தது அந்தப் பெரிய வீடு .நாலு வாசல்கள் இருக்கும் அந்த வீட்டில் பதினாறு கார்கள் நின்றிருக்கும். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெரிய வீட்டில் தாயம்மாள் பணிப் பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்தாள். எண்ணிச் சொன்னால் இருபது பேர் இருப்பார்கள் . வந்து போகிறவர்கள் எண்ணிக்கை ஒரு நாளைக்கு […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

மதுபான அறை…! – ராஜா செல்லமுத்து

அறைகள் சொல்லும் கதைகள் – 24 வாழ்க்கையைத் தன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாரதியின் வீட்டில் எத்தனையோ அறைகள் இருந்தாலும் அவர் தன்னை மறந்திருப்பது மதுபான அறையில் தான். வெளி உலகத்திற்கு அவர் சிறந்த மனிதர் .அவரைப் போல் யாரும் இல்லை என்ற அடையாளத்துடன் இருந்தாலும் தன்னுடைய இயல்பை, தன்னுடைய சுயத்தைத் தன் வீட்டில் இருக்கும் மதுபான அறையில்தான் கழிப்பார். அடுக்கி வைக்கப்பட்ட உயர்தர மதுபானப் பாட்டில்கள் ஆங்காங்கே இருக்கும் அழகாகப் பராமரிக்கப்பட்ட கண்ணாடி தம்ளர்கள் பத்துப் […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

தியான அறை…! – ராஜா செல்லமுத்து

அறைகள் சொல்லும் கதைகள்- 23 நகரிலேயே பெரிய பூங்காவாக இருக்கும் அண்ணா பூங்காவிற்குள் வயதான ஒரு பெரியவர் தோளில் கைப்பையுடன் உள்ளே நுழைந்தார். நரைத்த தலைமுடி. நீண்ட தாடி . வெளிறிய தேகம். கண்களில் தீட்சண்யம். செருப்பு இல்லாத கால்கள். அவரைப் பார்ப்பதற்கு ஒரு ஞானியைப் போல் தோற்றம் அளித்தார். பூங்காவிற்குள் நுழைந்து இடது புறமும் வலது புறமும் திரும்பிப் பார்த்தார் .நடைப் பயிற்சி செய்பவர்கள். உடற்பயிற்சி செய்பவர்கள் . ஊஞ்சலாடுபவர்கள் சறுக்கி விளையாடுபவர்கள் . அரட்டை […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

தானிய வைப்பறை..! – ராஜா செல்லமுத்து

அறைகள் சொல்லும் கதைகள்- 22 வெப்பத்தால் வெடித்துக் கிடந்த பூமி, சாரல் மழை பொழிந்ததும் ஈரம் அப்ப ஆரம்பித்தது. உஷ்ணத்தை வெளியேற்றிய மண்ணில் விதைகளை விதைக்கலாம் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு வந்தது. ஒவ்வொரு மாநில நீரையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து வறண்டு போன வாய்க்கால் வரப்புகள் எல்லாம் வானம் பொழிந்த மழையை வாங்கிக் கொண்டு செழித்து நின்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கானல் நீர் மட்டுமே மண்டிக் கிடந்த வெளிகள் எல்லாம் ஈரக்காற்று வீச ஆரம்பித்தது. அதிகாலையில் […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

கண்காணிப்பு அறை…! – ராஜா செல்லமுத்து

அறைகள் சொல்லும் கதைகள் 20 அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்த எட்டாவது மாடியில் ஐந்தாவது பிளாக்கில் நடந்த கொலையைத் துப்புத் துலக்குவதற்காக காவல்துறையினர் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றி வளைத்திருந்தார்கள். குடியிருப்பில் இருந்தவர்களைத் தவிர வேறு யாரும் அந்தக் கட்டிடத்திற்குள் நுழைவதற்குக் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. ஏறத்தாழ ஐநூறு வீடுகள் இருக்கும் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு பேசும் அத்தனை மாநிலத்து மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் எட்டாவது மாடியில் ஐந்தாவது பிளாக்கில் உள்ள அனுஷாவின் […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

பேச்சிலர் அறை – ராஜா செல்லமுத்து

சென்னை நகரத்தில் வேலை கிடைத்து கிராமத்தில் இருந்து நகரம் வந்த சுரேந்தருக்கு சென்னை நகரம் அந்நியமாகப்பட்டது . அவனுக்கு தெரிந்த ஆட்கள் சென்னையில் இல்லை என்பதால் கிடைத்த வேலையை விடக் கூடாது என்ற பிடிவாதத்தில் எப்படியாவது சென்னையில் தங்கிக் கிடைத்த வேலையைச் செய்து சம்பாதித்து விட்டு தான் கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான் சுரேந்தர் . சென்னையில் வேலை கிடைப்பது எளிதாக இருந்தது. ஆனால் அவனுக்கான அறை கிடைப்பது தான் ரொம்பச் சிரமமாக இருந்தது. […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

சோதனை அறை…! – ராஜா செல்லமுத்து

ஆயிரம் தடவைக்கு மேல் சென்னை விமான நிலையத்திலிருக்கும் கண்ணாடிக் கதவுகள் விழுந்து நொறுங்கியதைக் கவனிக்காமல் ,அது எதற்கு மறுபடியும் மறுபடியும் உடைகிறது? என்று தீர ஆராய்ச்சி செய்யாமல் சாதாரணப் பயணிகளை மட்டும் தீவிரமாகச் சோதனை செய்த பிறகே விமானத்தில் பயணிக்க அனுமதித்தார்கள் சோதனை அதிகாரிகள். வானத்தில் பறவையாய் பறந்து கொண்டிருந்த விமானங்கள் தரை இறங்கி, தன் சக்கரக் கால்களில் வேகமாக உருண்டு சென்றன. முதன் முதலில் விமானம் ஏறிக் காது அடைத்து ,வாந்தி எடுத்து நின்ற பயணிகள் […]

Loading