வாடகை வீட்டில் 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர் ரமேஷ்குமார் – ராதிகா தம்பதியினர். அவர்களுடன் ரமேஷ்குமாரின் அம்மா சரஸ்வதி அம்மாவும் துணையாக வாழ்ந்து வந்தார். தாய் சொல்லைத் தட்டாத தனயனாகவும் தாய்க்குப் பின் தாரம் என்பதை அறிந்தவனாகவும் வாழ்க்கையை நடத்தி வந்த ரமேஷ்குமாருக்கு சொந்த வீடு கட்டி சுதந்திரமாக வாழ்ந்திட வேண்டுமென்ற கனவு இருந்தது. தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த அவன் தனது சேமிப்பிலிருந்து வாங்கிப் போட்டிருந்த புறநகர்ப் பகுதி வீட்டு மனையில் வங்கிக் கடன் […]