ரஞ்சித், ராகவன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் இருப்பவர்கள். அதனால் அவர்களுக்குள் எதுவும் ரகசியம் இருந்ததில்லை. இருவரின் அந்தரங்க விஷயம் முதல் அத்தனை விஷயங்களும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் கடன் கொடுப்பதும் வாங்குவதும் இல்லை. டீ சாப்பிடுவது முதல் பெரிய செலவுகள் வரை ஏதாவது இருந்தால் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள். ரஞ்சித் கொடுப்பதற்கு முன் ராகவன் கொடுப்பான் .ராகவன் கொடுப்பதற்கு முன் ரஞ்சித் கொடுப்பான். இதனால் இருவருக்கும் பரஸ்பரம். […]