சிறுகதை

கதை நாயகன் – ராஜா செல்லமுத்து

முத்துராமலிங்கம் திரைத்துறையில் இயக்குநராக வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சி செய்து கொண்டிருப்பவன். திறமைக்கும் அறிவுக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை. திறமை இருப்பவன் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெற்றவன் எல்லாம் திறமையாளன் இல்லை. ஏதோ சந்தடி சாக்கில் ஜெயித்து விட்டு போகிறார்கள் திரைத் துறையில். முத்துராமலிங்கம் எழுத்தாளர் எதை எழுதினாலும் நெத்தியடியாக எழுதும் எழுத்தாளர். ஆனால் அவன் எழுத்துக்கும் அவன் வாழ்க்கைக்கு ஒற்றுமை இருந்தது எழுத்து வளமாக இருந்தது. வாழ்க்கை நலமாக இருந்தது. வளம் வர வேண்டும் […]

Loading

சிறுகதை

அன்பும் பாசமும் – ஆர்.வசந்தா

அன்பும் பாசமும் யாவருக்கும் பொதுவானதே. அந்த ஊர் இந்தியாவின் கடைசி எல்லை ஊர். ஒரு தெரு, இந்தியாவின் கடைக்கோடி. அடுத்த தெரு பாகிஸ்தானின் முதல் தெரு. இரு நாட்டிற்கும் பொதுவாக ஒரு பூங்கா இருக்கும். இரு நாட்டு மக்கள் ஜாதி, மதம் கடந்து ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் அந்தப் பூங்காவில் மகிழ்ச்சிகரமாக ஓடி ஆடி விளையாடினார்கள். இரு எதிர்வீட்டு நண்பர்களும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டனர். இந்தியன் ராம்குமாரும் பாகிஸ்தான் ரஹ்மானும் ஒன்றாக உட்கார்ந்து பேசி […]

Loading

சிறுகதை

பந்தி – ராஜா செல்லமுத்து

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து என்ற பழமொழியின் அர்த்தம் வேறொரு பொருளைத் தந்தாலும் பந்திக்கு முந்து .படைக்குப் பிந்து என்பது வாழ்க்கை வழக்கில் சாப்பாட்டிற்கு முந்து போருக்குப் பிந்து என்று விளக்கமாகிவிட்டது முருகன் அப்படித்தான் இருந்தான் சாப்பாட்டிற்கு அலையும் ஆளல்ல என்றாலும் தன் கௌரவத்திற்கும் தன் நடவடிக்கைக்கும் ஏற்றார் போல் இருந்தால் மட்டுமே இறங்கி சாப்பிடும் குணம் உள்ளவன். தன்னுடைய தராதரம் கொஞ்சமாவது அங்கு குறைபட்டிருந்தால் எத்தகைய பந்தியாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வரும் பிடிவாதக்காரன் […]

Loading

சிறுகதை

சைன் போர்டு – ராஜா செல்லமுத்து

… பிரதான சாலையின் ஓரத்தில் சந்திரன் என்ற சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி டூவீலர், ஃபோர் வீலர் வாகனங்களின் எண்கள் எழுதப்பட்டிருந்தன. உங்கள் வீட்டில் எட்டு போட வேண்டுமா ? இங்கு அணுகவும் என்று சந்திரன் தன்னுடைய செல்போன் நம்பரை பதிவிட்டு இருந்தார். தான் இருக்கும் இடத்திற்கு மேலே உள்ள மரத்தில் வெள்ளைப் பேப்பரில் எண்ணற்ற வண்ணங்களை தெளித்து அதை பார்வைக்காகத் தொங்க விட்டிருந்தார்.அது வானவில்லின் வண்ணங்கள் போல காட்சி அளித்துக் கொண்டிருந்தன. அவர் […]

Loading

சிறுகதை

கூகுள் பே, போன் பே – ராஜா செல்லமுத்து

.. பழக்கடையில் இருந்து பிளாட்டினம் விற்கும் ஜுவல்லரி வரை போன் பே கூகுள் பே என்று டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டார்கள் மக்கள் . கல்லாவில் பணத்தை நிரப்பி எச்சில் தொட்டு எண்ணும் சுகம் சிந்தும் சில்லறைகளின் சங்கீத ச சத்தம் இவைகள் எல்லாம் நாளடைவில் காணாமல் போய்விட்டன. அந்த அளவிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மனிதன் பரிமாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறான் . அது ஒரு வகையில் நிம்மதியான விஷயமும் கூட. கையில் இருக்கும் பணத்தை எண்ணிக் கொடுக்கும் போது […]

Loading

சிறுகதை

அவன் எங்கே போகிறான்? – எம். பாலகிருஷ்ணன்

இராமன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் அவன் இந்த ஒரு மாதமாக விடுமுறையன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் எங்கோ போய் விட்டு வருகிறான். வீட்டில் பெற்றோரிடமும் சொல்வதுமில்லை; அவனைப் பற்றி பெற்றோர் கவலைபடாத நாளில்லை; மகன் இராமனைப்பற்றி சிலர் அவர்களிடமே புகார் சொல்வர். உன் மகனை அங்கே பார்த்தோம்; இங்கே பார்த்தோம்; கண்டிச்சி வையுங்கள்; இல்லையின்னா கெட்டுப் போவான் என்று பெற்றோரிடம் கூறிவிட்டனர். இராமனின் பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை எங்கே போகிறான்; அதுவும் சொல்லாமல் போகிறானே ; […]

Loading

சிறுகதை

ஒரு பழமொழி உருவான கதை – ஆர். வசந்தா

சில வருடங்களுக்கு முன் ஒரு அழகிய ஊர் தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருந்தது. அங்கு ஒரு ஜமீன்தாரர் ஒரு அரண்மனை போன்ற வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் அரண்மனையின் அருகிலேயே விவசாயி கந்தன் ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வாழ்ந்து வந்தான். அந்த விவசாயி வீட்டின் கொல்லைப் பகுதியில் வீட்டிற்குத் தேவையான காய்களை விளைவித்து வந்தான். சில பூசணி விதைகளையும் விதைத்தான். ஆடி பட்டம் தேடி விதைத்ததால் முளை விட்டு செடியும் வந்தது. நன்றாக பராமரித்தும் வந்தான். […]

Loading

சிறுகதை

சுயநலம் – ராஜா செல்லமுத்து

சுரேஷ் பலசரக்குக் கடையில் மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது .பாலு மற்ற வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டே இருந்தான். குறுக்கே எதுவும் பேசவில்லை. அவனுக்கு முன்னால் இருந்த 5, 6 பெண்கள், ஆண்கள் தங்கள் பொருட்களை வாங்கும் வரை அவன் வாய் திறக்கவே இல்லை. அனுமார் வால் போல் நீண்ட பெயர் பட்டியலை பாலுக்கு முன்னால் இருந்தவர்கள் வாசித்துக் கொண்டே இருக்க,சோப்பு முதல் சீப்பு வரை அத்தியாவசியப் பொருள்களையும் சமையல் சாமான்களையும் பெயர் சொல்லச் சொல்ல […]

Loading

சிறுகதை

தாயானாள்.. காதலி…! – ராஜா செல்லமுத்து

நினைவுகள் எல்லாம் நெருப்பாகவும் கனவுகள் எல்லாம் காயங்களாகவும் பார்ப்பதெல்லாம் கசப்பாகவும் வாழும் வாழ்க்கை எல்லாம் வெறுமையாகவும் இருந்த நேசனுக்குள் ஒரு மெல்லிய காலைப் பொழுதில் மெல்ல நுழைந்தாள் வீணா. அவள் வரும் வரையில் அடைத்தே கிடந்த அவனின் இதய வாசல் கதவுகள் எல்லாம் அன்று பூக்களை பொக்கேவாக வடித்துக் கொண்டு அவன் கைகளில் வலுக்கட்டாயமாகத் திணித்துவிட்டு சென்றன. ” இந்த இதய ரோஜா செடியில் ஒற்றைப் பூ பூத்து விட்டால், அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன” என்று […]

Loading

சிறுகதை

அமுத விஷம் – – ஆர்.வசந்தா

ரகுவுக்கு திடீரென மனச் சோர்வாகவே இருந்தது. சில நேரங்களில் தலைவலியும் இருக்கும். ‘டிப்ரஷன்’ நிலைக்கும் போய்விடுவான். அவனுக்கு என்னவோ ஏதோ என்று அம்மாவும் பயப்பட ஆரம்பித்து விட்டாள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்கச் சொன்னாள். மருத்துவர்கள் ரகு நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். சில நேரங்களில் பித்துப் பிடித்தாற்போல் ஜடமாக உட்காரந்திருப்பான். திடீரென தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. நாளுக்கு நாள் தற்கொலை எண்ணம் வலுவடையத் தொடங்கியது. எப்போதும் அந்த நினைவை எப்படி செயல்படுத்துவது என்று […]

Loading