சிறுகதை

விளையாட்டல்ல வாழ்க்கை | டிக்ரோஸ்

பள்ளியில் படிக்கும் காலத்தில் போலீசாருக்கு உதவியவன்; கல்லூரியில் பேட்மிண்டன் பிளேயர்; ரகசிய பிரிவு காவல் துறையினரின் நம்பிக்கை நட்சத்திரம்; ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரி ரவீந்திரனின் சிஷ்யன் ரத்தனின் வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்! ஓய்வு பெற இருந்த ரவீந்திரனின் மகள் சாந்தினி கல்லூரி வளாகத்தில் ரத்தனின் பாதுகாப்பு பார்வையில் இருந்தாள். அவளுக்காக முதுகலை பட்டத்தையும் அதே மாநில கல்லூரியில் படித்து முடித்தான். அவளின் காதலனாக மாறியும் விட்டான்! சில பல காரணங்களுக்காக ஒரு தனியார் […]

சிறுகதை

இவர்கள் வித்தியாசமானவர்கள் | ராஜா செல்லமுத்து

வீட்டில் இருந்த படியே மாதாமாதம் பல லகரங்களைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் தேவியும் திருக்குமரனும். இருவரும் கணவன் மனைவி என்றாலும் வியாபார விசயத்தில் இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் அல்ல . இருந்தாலும் தேவி தான் இந்தப் பணம் கொட்டும் தொழிலைத் துவக்கி வைத்தாள் என்பது கணவனுக்குக் கண்கூடு. எப்படியோ இருந்த குடும்பம் இப்படி வசதி வாய்ப்புகளோடு வாழ்வதற்கு தேவி தான் முதற்காரணமென்பது உறவினர்கள் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகவே தெரியும். வழக்கம் போல தங்கள் வேலைகளை முடித்துவிட்டு […]

சிறுகதை

ஸ்டாண்ட் மேன் | ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் அமைந்துள்ள அந்த பிரபலமான ஓட்டலுக்கு அடிக்கடி கார்களும் வண்டிகளும் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். அத்தனை கார்களையும் வண்டிகளையும் ஒழுங்குபடுத்தி ஒவ்வொன்றையும் எந்தச் சிரமமும் இல்லாமல் வெளியே போக, உள்ளே வர என அத்தனையும் ஒழுங்காகச் செய்வார் பழனி. எண்பதைத் தொட்டு எண்பத்து ஒன்றை எட்டிப்பார்க்கும் வயது . ஆளைப் பார்த்தால் அப்படியொன்றும் வயதான தோற்றமாக இருக்காது. சின்ன வயது உடம்பு போல அவ்வளவு சிக்கென வைத்திருப்பார். அவர் ஓடியாடி வேலை பாரக்கும் […]

சிறுகதை

அப்பாவைக் காணோம் | ராஜா செல்லமுத்து

வழக்கம் போல ஒரு வருடம் முடிந்து புதுவருடமும் அன்று இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறந்தது. ஊரெல்லாம் பட்டாசு, உற்சாகம் என சந்தோசத்தில் மூழ்கிக் கிடக்க வேளாங்கண்ணன் வீடு மட்டும் வெறிச்சோடிக்கிடந்தது. – அவன் வீட்டிற்கே மேலே ‘சர்’ எனப் பறந்து போன ராக்கெட் வெடி ‘பட்’ என வெடித்து அவன் வீட்டின் மேலேயே விழுந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிடந்த பாத்திரங்களை ஒழுங்குபடுத்தாமலே உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா, இரண்டு கைகளையும் இறுகக் கட்டிக் கொண்டு எதையோ வெறித்துப் பார்த்தபடியே இருந்தான் […]

சிறுகதை

மகிழ்ச்சி | ராஜா செல்லமுத்து

வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே முடங்கிப்போய்க் கிடக்கும் லிங்கத்திற்குப் போதும் போதுமென ஆகிவிட்டது. எப்படா வீட்ட விட்டு வெளியே போவோம் என்ற எண்ணமே அவருக்கு மேலோங்கி நின்றது. அறுபத்து நான்கு வீடுகள் அடைத்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. அவருக்கு ஒரு திறந்த வெளிச்சிறையாகவே தென்பட்டதேயொழிய அவர் சிறகு விரித்துப் பறக்கும் வானமாக அது வசப்படவே இல்லை. உள் வீடு , வெளி வீடு , வராண்டா என்ற அடிப்படை அறைக்குள்ளேயே கழிந்து கொண்டிருக்கிறது அவரின் ஆயுட்காலம். இதை […]