சிறுகதை

கிராம நேசம் – மு.வெ.சம்பத்

மதன்குமார் தனது மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தைப் பற்றி சிறு வயது முதலே அவனது அப்பா கோவிந்தனிடம் கேட்டுத்தெரிந்து கொண்டார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொந்த கிராமத்துக்கு சென்று வருவார். அவனது அப்பா கோவிந்தன் எங்கள் மூதாதையர் நிலங்களை எல்லாம் நான் விற்கவில்லை. அங்குள்ள ஒருவர் மூலம் விவசாயம் செய்து பாதுகாத்து வருகிறேன் என்பார். கோவிந்தன் வேலை நிமித்தமாக வெளியூர் வந்தது தங்கி விட்டதால் அவருக்கு கிராம வாழ்க்கைப் பயணம் அற்றுப் போனது. கோவிந்தன் மதன் குமாரைப் பார்த்து […]

Loading

சிறுகதை

வேற்று கிரகவாசி – சி.சுரேஷ்

… வேளாண்மை பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த முகுந்தனின் மனதில் கண்ணீர் கசிந்தது. கண்ணுக்கு எட்டியவரை எங்கு பார்த்தாலும் மாடி வீடுகள் அடுக்கடுக்காய் காட்சி தந்தது பசுமை மரங்கள் பார்க்க இயலவில்லை. காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு நாடுகளாய் உருவெடுத்திருந்தது; கேட்டால் நாடு முன்னேறி விட்டது; நகர் மயமாகி விட்டது என்கிறார்கள். குடிக்கும் தண்ணீர் பாக்கெட்டில் விற்கப்படுகிறது. உயிர்வாழ சுவாசிக்க நல்ல காற்று கிடையாது. எங்கு பார்த்தாலும் மோட்டார் வாகனங்களின் பெருக்கம். இந்த நவநாகரீக வாழ்க்கை […]

Loading

சிறுகதை

கைப்பக்குவம் ..! – ராஜா செல்லமுத்து

“ரேவதி நீ சமைக்கிறது ரொம்ப நல்லா இருக்கு .உன் கைப்பக்குவம் சூப்பர் . ரேவதி நீ துணி துவைச்சு போட்டா ரொம்ப சுத்தமா இருக்குது. நல்லா அயர்ன் பண்ணித் தா. நீ வீட்ட கிளீன் பண்ணா அவ்வளவு நேர்த்தியா இருக்கு “ என்று அவளைப் பற்றிச் சொல்லாத ஆட்கள் இல்லை. எல்லாம் அவள் கைராசி. “ரேவதி பாப்பாவுக்கு டிபன் குடு” “இந்தா வைக்கிறேன் அம்மா “ “ரேவதி மதியம் பிரியாணி பண்ணி வை “ “சரிங்கம்மா “ […]

Loading

சிறுகதை

என்னைப் பார் – மு.வெ.சம்பத்

அந்த சலவைத் தொழிலாளி இரண்டு கழுதைகள் வளர்த்து வந்தான். ஆற்றங்கரைக்கு துணிகளை எடுத்தச் செல்ல அவைகளை பயன்படுத்தவான். இரண்டு கழுதைகளும் பக்கத்துக்குப் பக்கமாகச் செல்லும். காலையில் அவைகளுக்கு தீனி போட்டு விட்டுத் தான் அழுக்குத் துணிகளை அதன் மேல் ஏற்றுவான். சில சமயம் அதிகமாகவும். சில சமயம் மிதமாகவும் துணிகள் ஏற்றபட்டு இருக்கும். ஆற்றங்கரை வந்ததும் அவற்றை இறக்கி வைத்து விட்டு கழுதைகளை அங்கு சுதந்திரமாக திரிய விடுவான். கழுதைகள் எல்லைக் கோட்டைத் தாண்டாத வண்ணம் அடிக்கடி […]

Loading

சிறுகதை

ஆள் மாறாட்டம் ….! – ராஜா செல்லமுத்து

ஏற்றுமதி இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் ஆட்கள் வருவதும் போதுமாக இருந்தார்கள்.அந்த நிறுவனத்தின் முதலாளி ரொம்ப கோபக்கார பேர்வழி .தொழிலில் அவ்வளவு நேர்த்தி . யார் எது சொன்னாலும் பணம் , தொழில் இரண்டைத் தவிர அவர் உதடுகள் வேறு வார்த்தையை உச்சரிக்காது. இதனால் அவரைப் பார்ப்பதும் பேசுவதும் வியாபாரமாக மட்டுமே இருக்குமே ஒழிய அன்பைப் பற்றியோ பாசத்தைப் பற்றியோ சிறிதும் இருக்காது. அப்படி இருக்கும் அந்த மனிதரின் தொழில் பக்தியைப் பார்த்து சிலர் மெச்சிப் போவார்கள் […]

Loading

சிறுகதை

துணிவே துணை ! – எம்.பாலகிருஷ்ணன்

அன்று நடு இரவு நேரம் வெளியூரிலிருந்து கிராமத்திலுள்ள தன்னுடைய பெற்றோரை பார்க்க ஒரு வருடம் கழித்து சொந்த ஊருக்கு அந்த நடு இரவில் வந்து கொண்டிருந்தான் ரெங்கன்.! மெயின் ரோட்டிலிருந்து அவன் வீடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். அன்று மின்சாரம் தடை வேறு. ஓரே இருள் மயம். “என்னடா இது கரெண்ட் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருக்கு” என்று தனக்குள்ளே புலம்பினான் ரெங்கன். அவனுடைய வீடு மலையடிவாரத்தில் இருந்தது. மெயின்ரோட்டில் இருந்து அவனுடைய […]

Loading

சிறுகதை

நத்தைகள்…! – ராஜா செல்லமுத்து

சேகரும் ராஜாவும் மாலை நேரம் தேநீர் அருந்திவிட்டு சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் தேநீர் கடைக்காரன் தேனீர் நன்றாகப் போட்டதாகப் பேசிக் கொண்டு வந்தார்கள் . மாலை நேரக் காற்று இதமாக அடித்துக் கொண்டிருந்தது. சாலை வழியாக நடந்து கொண்டிருந்தபோது அவர்கள் பார்த்த காட்சி அவர்களை உலுக்கியது. அவர்கள் செல்லும் வழியில் இரண்டு மூன்று நத்தைகள் ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன. தன் எச்சிலைச் சாலை வழியே கோடு போட்டுக் கொண்டு தன் முகத்திற்கு மேலே […]

Loading

சிறுகதை

பயணம்..! – ராஜா செல்லமுத்து

… இரவு மணி பத்தைக் கடந்து நின்றது . கோயம்பேடு பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்தாலும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. ராஜேஸ்வரி பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாள். கையில் இரண்டு பைகள். பேருந்து வரும் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து நிறைய பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. அவள் பதிவு செய்யப்பட்டிருந்த பேருந்து வந்தபாடில்லை. திசைகள் முழுதும் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தாள். குமார் தன் உறவினர்களை அதே இடத்தில் பேருந்தில் ஏற்றி விட்டு […]

Loading

சிறுகதை

பிரேயர் ..! – ராஜா செல்லமுத்து

விரிந்து பரந்து கிடந்த அந்த மருத்துவமனையில் எண்ணற்ற நோயாளிகள் படுத்து கிடந்தார்கள். அவரவர் நோய்களுக்கு அவரவர் காரணம் என்று அங்கிருந்த சிலர் பேசிக் கொண்டார்கள். உள் நோயாளிகள் வெளி நோயாளிகள் என்றிருந்த அந்த மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகள் சிலர் படுத்திருந்தார்கள் .சிலர் சத்தம் போட்டு கத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் மௌனமாக அழுது கொண்டிருந்தார்கள். ” வெளியே போங்க டாக்டர் விசிட் வராங்க “ என்று ஒரு செவிலித்தாய் சொல்ல அங்கே அமர்ந்திருந்த உறவினர்கள் எல்லாம் வெளிநடப்பு […]

Loading

சிறுகதை

மகத்தான தோல்விகள்- ஆர். வசந்தா

தோல்விகளை யாராவது மகத்தானது என்பார்களா! வெற்றியைத்தானே மகத்தான வெற்றி என்று குறிப்பிடுவார்கள். இந்த மாதிரி தோல்விச் சம்பவங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கின்றது. அவன் பெயர் கிருஷ்ணன். சற்று வெளிறிய நிறம். வலுவில்லாத தேகம். அதனால் அவனை அவன் பெற்றார்கள் பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். அவனுக்கு பசி என்றால் என்னவென்றே தெரியாது. டாண் டாண் என்று அவனுக்கு அவன் அம்மா உணவு கொடுத்து விடுவாள். எவ்வளவு உடல்நலம் சரியில்லா விட்டாலும் வீட்டிலேயே குளிக்கத் தண்ணீர் கிணற்றில் இரைத்து கொண்டு […]

Loading