சிறுகதை

உழைப்பு – முயற்சி – நம்பிக்கை | ராஜா செல்லமுத்து

ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தான் ராஜேஷ். கண்டிப்பாக ஒருநாள் இந்த உலகத்தில் நாமும் ஜெயித்து வசதியோடு மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்பதுதான் ராஜேஷின் அளப்பரிய அலாதியான விருப்பம். அவனின் விருப்பத்திற்கு ஒருபோதும் மனதில் தடை வந்ததே இல்லை தான். நினைப்பதை சாதித்தே ஆக வேண்டும் என்று அடி மனதில் கங்கணம் கட்டி உழைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய நம்பிக்கையில் சிறிதளவும் சந்தேகமில்லை. அவன் உழைப்பிலும் சிறிதளவும் சந்தேகமில்லை. அவன் முயற்சியிலும் சிறிதளவும் சந்தேகமில்லை. உழைப்பு முயற்சி நம்பிக்கை […]

சிறுகதை

அடையாள அட்டை | கே. அசோகன்

”அலைபேசி கிணுகிணுக்க…அதை எடுத்தான் நாராயணன். அடுத்த நிமிடம் ஆச்சர்யத்தோடு அதிர்ச்சியானான். மறுமுனையில் ராமு: ”என்னடா நாராயணா எப்படி இருக்கே? விசாரித்தான். நான் நல்லா இருக்கேன்டா என்று சுருக்கமாக முடிக்கப் போக.. டேய் இருடா ஒன்னயை நான் பார்க்கணுமே!” என்றான் நாராயணன். ”ஒரு நிமிஷம்டா … செகரட்டரியக் கேட்டு சொல்றேன்டா!” ”டேய் நான் உன்னைத்தான் பார்க்க வரேன். ஒன் செகரட்டரிய இல்லேடா! ”அதில்லேடா இதெல்லாம் எங்க கம்பெனியோட பார்மாலிட்டிடா” என்றான். ”என்ன பார்மாலிட்டியோ அலுத்து கொண்டான். ஒரு வாரம் […]

சிறுகதை

எதிர்பாராதது | ராஜா செல்லமுத்து

கொரானாவின் கடுமையினால் விழாக்கள் எல்லாம் விழுந்து கிடந்தன. 100 பேருக்கு மேல் கூடுவது கொடுமையானது என்று அரசாங்கம் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கிறது. எங்கு சென்றாலும் சமூக இடைவெளி எல்லோர் முகத்திலும் முகமூடி என்று சராசரி வாழ்க்கையை சற்று சிரமமாக இருக்கிறது. சாதாரண நாட்களில் எல்லாம் விழா விழாவாக இருக்கும் வீதிகள் எல்லாம் இப்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன. கல்யாண மண்டபங்கள் காற்றாடிக் கிடக்கிறது . விழா அரங்குகள் விடை பெற்றிருக்கின்றன. இந்த நாட்களில் கொண்டாட்டங்கள் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது. […]

சிறுகதை

கடமை |ராஜா செல்லமுத்து

இன்னும் எவ்வளவு நாளைக்கு தாங்க, இந்த துன்பத்திலே நம்ம வாழப் போறோம். கட்டிக் கொடுக்க வேண்டிய பொண்ணு . வேலைக்கு போக வேண்டிய பையன். இருக்கிற வீடு சரியா இல்ல. சாப்பிட்ட சாப்பாடு சரியில்லை. இப்படியே நாம எவ்வளவு நாளைக்கு தான் வாழப் போறோம்? இதுக்கு ஒரு முடிவே இல்லையா? நீங்க சம்பாரிச்சுட்டு வர்ற கொஞ்சம் பணத்தை வச்சு, ஏதோ வாழ்க்கை சரியா அமையல.. எங்க நம்ம வாழ்க்கை இப்படித்தான் போகுமா? நாமும் நாலு பேரப் போல […]

சிறுகதை

சவாலைச் சந்தித்து வெற்றி பெறுவேன் | கரூர். அ. செல்வராஜ்

தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் தொழிலை புதிதாய் தொடங்கியிருந்தான் தங்கராஜ். வீட்டிலிருந்து 2 கி. மீ. தொலைவிற்குள் அமைந்திருந்த தெருக்களில் மட்டும் தனது தொழிலைச் செய்து வந்தான். காலம் தவறாமை, கனிவான பேச்சு, அனைத்து வகையான வாடிக்கையாளர்களையும் வயது வித்தியாசம் பார்க்காமல் மிகுந்த மரியாதையுடன் நடத்துதல் போன்ற நல்ல பண்புகளோடு காய்கறி விற்பனையில் நியாயமான விலை என்பதும் சேர்ந்து கொண்டதால் குறுகிய காலத்தில் நல்ல பெயர் வாங்கியிருந்தான் தங்கராஜ். வழக்கம் போலக் காலை நேரத்தில் காய்கறி விற்பனையை […]

சிறுகதை

சிவகாமியின் தங்கை! |சின்னஞ்சிறுகோபு

சென்ற வருடத்தில் ஒருநாள். நான் எனது கிராமத்து வீட்டில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன். வீட்டுக்கு வெளியே இருந்த முருங்கை மரத்திலிருந்து ஒரு காக்கை வெகுநேரமாக கத்திக்கொண்டிருந்தது! எனக்கும் 66 வயதாகி விட்டது. நான் பிறந்து வளர்ந்ததிலிருந்து வேலைக்குப் போகும்வரை இந்த கிராமத்தில்தான் இருந்தேன். வேலைக்கு சென்றபிறகும் திருமணம் ஆனபிறகும் அருகில் உள்ள நகரத்தில் வசித்தாலும் இந்த கிராமத்து வீட்டில் எனது அம்மா மட்டும் வசித்ததால் இந்த கிராமத்து வீட்டுக்கு வாரத்திற்கு ஒரு தடவையாவது வந்துவிடுவேன். இந்த கிராமத்து வீட்டிலிருந்துதான் […]

சிறுகதை

அத்தைமகள் | மலர்மதி

“திவாகர்… நாம இப்படியேவா காலம் தள்ளப் போறோம்?” ஐஸ்கிரீமைச் சுவைத்துக் கொண்டே அருணா கேட்டாள். அவள் மடியில் படுத்திருந்த திவாகர் ‘சரே’லென எழுந்து அமர்ந்தான். “இப்ப நம்ம லைஃப் ஜாலியாத்தானே ஓடிக்கிட்டிருக்கு? இதுக்கு என்ன குறை?” என்று கேட்டான். “என்ன குறையா? நான் கேக்கறதையெல்லாம் வாங்கித் தர்றீங்க. நான் மறுக்கலை. இதோ இப்ப நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற இந்த ஐஸ்கிரீம் கூட நீங்க வாங்கிக் கொடுத்ததுதான். ஆனால், காசு யாருடையது?” “அதைக் கேக்கறியா? என் அப்பாவோட காசுதான்.” […]

சிறுகதை

உழைப்பே மருந்து | சீர்காழி . ஆர். சீதாராமன்

ராமசாமி பிரபல தொழிலதிபர் கோடிகளில் சொத்து வியாபார உத்தி தெரிந்தவர். நேர்மையானவர் ; தயாள குணம் படைத்தவர்; ஆன்மீக சிந்தனை படைத்தவர்; ஏழைகளுக்கு உதவும் உத்தமர் . அவருக்கு ஆறு மகன்கள் , மகள் இல்லை. மனைவி சீதா இல்லத்தரசி. நான்கு மகன்களுக்கு திருமணம் நடந்து பேரன் பேத்தி பார்த்த ராமசாமிக்கு வயது எழுப்பத்தி எட்டை நெருங்கியது. ராமசாமியின் ஒரே கவலை பிள்ளைகள் எவரும் வேலைக்கோ , சுய தொழிலோ எதுவும் செய்யாமல் அவரின் வருமானத்தில் உழைப்பில் […]

சிறுகதை

வாரிசுகள் | ராஜா செல்லமுத்து

‘‘குடும்பச் சொத்தை பிரிச்சுக் கொடுங்க…’’ வழக்கம்போல அன்றும் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு இருந்தான் கணேஷ். ‘‘உன்னத்தான் படிக்க வச்சாச்சு. அதுக்குத் தகுந்த மாதிரி வேலை வாங்கிக்கிட்டு போகாம இன்னும் குடும்பத்து சொத்து கேட்டுக் கொண்டிருக்கிறது நியாயம் இல்ல. உன்ன பெத்தோம்; படிக்க வச்சோம்; அதோட எங்க கடமை முடிஞ்சு போச்சு. அதுக்கப்புறம் சம்பாதிக்கிறது உன்னோட கடமை. அது உன் கையில தான் இருக்கு. அத விட்டுட்டு குடும்பச் சொத்தை பிரிச்சு கேட்கிறது முறை இல்ல ’’என்று கணேஷின் […]