அனல் கக்கும் மதிய வேளையில் பேருந்து நிறைய ஆட்களை ஏற்றிக்கொண்டு தார் சாலை வழியே நகர்ந்து கொண்டிருந்தது ஓர் அரசுப் பேருந்து. செங்கல் சூளைக்குள் இருப்பதாக உணர்ந்த பயணிகள் தங்கள் கைகளில் இருக்கும் கைக்குட்டையைக் கொண்டு முகம் கழுத்தை துடைத்துக் கொண்டார்கள். பெண்கள் தங்கள் முந்தானையில் வடியும் வியர்வையைத் துடைத்துச் சரி செய்து கொண்டார்கள் . சராசரியாக எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று சென்று கொண்டிருந்தது பேருந்து. அக்னி நட்சத்திரம் அப்படின்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன ? […]