அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா வெகுவாகக் கொண்டாட ஏற்பாடானது. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பலூன், வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ” இன்னைக்கு யாருக்குப் பிரிவு உபச்சார விழா ? ” என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் கேட்க ” தெரியலையே? யாராவது உயர் அதிகாரி ரிடையர் ஆவாங்க போல, அதான் அலுவலகமே, அலங்காரம் செய்யப்பட்டிருக்கு ” என்று அவரும் பதில் சொல்ல, அலுவலகம் மொத்தமும் அன்று களை கட்டியிருந்தது. அலுவலகத்தின் பிரதான […]