ஆர். முத்துக்குமார் வயநாடு மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால், மக்களவை உறுப்பினர் பதவியை இழந்திருப்பது அரசியல் களத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 2019–ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடகத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, மோசடி வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற தொழிலதிபர்கள் நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். சூரத் […]