செய்திகள் நாடும் நடப்பும்

உடலையும் மனதையும் ஒருமைப்படுத்தி சிறப்பாக செயல்பட வைக்கும் யோகா

ஆர். முத்துக்குமார் பிரதமர் மோடி நமது பாரம்பரிய சிறப்புகளான யோகா கலைக்கும் உணவு தானியமான மில்லட்டிற்கும் மிகப்பெரிய விளம்பரத் தூதராக செயல்பட்டு அவற்றுக்கு மேலும் அங்கீகாரத்தை ஈட்டியுள்ளார். யோகா என்றாலே இந்தியா என்ற எண்ணத்தை சர்வதேச அளவில் தடம் பதிக்க வைத்த பெருமை பிரதமர் மோடிக்கு நிச்சயம் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக நமது சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும் இந்த யோகா கலை இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்ற பிறகு இதன் சிறப்புக்களை ஆய்வு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நமது வல்லரசு சாதனைக்கு உறுதி தரும் பிரம்மோஸ்

ஆர். முத்துக்குமார் கடந்த வாரம் வியட்நாம் ஆயுதப்படை தலைவர் மற்றும் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைக்களுக்கு விலை பேசி இருக்கிறார்கள். உக்ரைனில் ரஷ்யாவின் ஆயுதப் படைகள் மீது தாக்குதல் நடத்தும் நாட்டோ அணி நாடுகளின் ஆயுதங்களால் எந்தப் பெரிய சேதத்தையும் ஏற்படுத்த முடியாது தவிக்கிறார்கள். ஆனால் எதிரியின் தாக்குதலை நிறுத்துவதுடன் எதிர் தாக்குதல் உக்கிரகமாக இருப்பதும் அவசியமாகுகிறது. அதில் ரஷ்ய படை சிறப்பாகவே செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ரஷ்யாவின் ஆயுதங்கள் குறிப்பாக பீரங்கிகள், ஆகாய […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்; 70,000 புள்ளிகளைத் தொடத் தயாராகும் பங்குச் சந்தை

ஆர்.முத்துக்குமார் இந்தியப் பங்குச் சந்தை 6 மாதங்களுக்கு முன்பு சில நிமிடங்களுக்கு 63,000 புள்ளிகளை தொட்டது. ஆனால் மீண்டும் சரிந்து விட்டது. இவ்வாண்டின் துவக்கத்தில் அதானி குழுமம் சந்தித்த சிக்கலில் மொத்த பங்குச் சந்தையும் 60,000 புள்ளிகளையும் விட குறைந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தை ஸ்திரமாகவே இருக்கிறது. பல துறைகளின் பங்குகள் வர்த்தகம் உயர்ந்தும் உள்ளது. இதனால் சமீபமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு 62,000 புள்ளிகளை தொட்ட பிறகு மீண்டும் புதிய […]

Loading

நாடும் நடப்பும்

ரெயில் பெட்டிகள் புரட்சியில் சாதிக்கும் ஐ.சி.எப்.

ஆர்.முத்துக்குமார் சமீபமாக ஜப்பான் சென்று திரும்பிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கு அதிவேக புல்லட் ரெயிலில் பயணித்த அனுபவத்தை வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். தமிழகத்திலும் அப்படிப்பட்ட சொகுசு வசதிகள் கொண்ட ரெயில் பயணங்களுக்கு நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. பிரதமர் மோடியும் அதிவேக ரெயில் சேவைகளை நாடெங்கும் ஓடச்செய்ய, ‘வந்தே பாரத்’ ரெயில் சேவைகளை பல்வேறு நகரங்களில் அறிமுகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஜப்பானில் புல்லட் ரெயில் சேவைகளை போன்றே சென்னையில் ஓடிக்கொண்டு இருக்கும் ரெயில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ரஷ்யாவை வீழ்த்த நேட்டோ உறுதி, தொடரும் சிக்கல்களால் சரியும் ஐரோப்பிய பொருளாதாரம்

ஆர். முத்துக்குமார் அமெரிக்காவின் வழிகாட்டுதலில் நேட்டோ (NATO) ராணுவக் கூட்டணியின் சமீப நடவடிக்கைகள் அனைத்துமே ரஷ்யாவை வீழ்த்த வழி காண்பது மட்டுமே என்று தெரிகிறது. உக்ரைனில் அமைதியை நிலைநாட்டப் போகிறோம் என்றார்கள் அல்லவா? அதாவது உக்ரைனில் அமைதி திரும்ப நடவடிக்கைகள் என்ன எடுத்தார்கள்? அதைக் கேட்கும் அதிகாரம் ஐநா சபைக்கு நிச்சயம் இருக்கிறது. ஆனால் இதுவரை அமெரிக்காவின் கூட்டாளிகளான நேட்டோ நாடுகள் ரஷ்யாவை வீழ்த்த எடுத்து வரும் முயற்சிகள் உலக வரலாற்றை மாற்றியமைக்கும் நடப்புகளாக மாறி இருக்கிறது. […]

Loading

நாடும் நடப்பும்

கடனில் தவிக்கும் அமெரிக்கா, கூடுதல் கடன் வாங்கி சமாளிக்கும் பைடன்

ஆர். முத்துக்குமார் சமீபமாக பொருளாதாரச் சரிவுகள் பற்றிய செய்திகள் தலைப்புச் செய்தியாய் இன்று உள் பக்கங்களில் இதர செய்திகளோடு கண்ணில் பெரிதாக படாமல் இருக்கிறது. அந்த வகையில் மே மாதத்தில் பெட்ரோல் தயாரிப்பு குறைப்பும் அமெரிக்கா பெற இருக்கும் அதிக கடன் ஏன்? என்ற செய்தியும் தலைப்புச் செய்தியாக இன்றி இருப்பது விந்தையாகவே இருக்கிறது. ரஷ்யாவை வீழ்த்த அமெரிக்கா எடுத்த ஆயுதம் நேட்டோ கூட்டணியை ஏவியது ஒரு பக்கம் என்றால் மற்றொன்று ரஷ்யா மீது பொருளாதார முற்றுகை. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆசியாவை தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைக்கும் ஸ்டாலின் பயணம்

நாடும் நடப்பும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணத்தை துவக்கி உள்ளார். சென்ற ஆண்டு துபாய் சென்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் முதலீடுகளுக்கு ஏற்ற களமாக இருக்கும் நிலையையும் விவரித்து பல்வேறு ஒப்பந்தங்களை தொழில்துறைகள், நிதி சேவை துறைகளிலும் ஏற்படுத்திய வெற்றியுடன் நாடு திரும்பினார். அந்த வரிசையில் இம்முறை பொருளாதார வெற்றிகளின் இலக்காக இருக்கும் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் ஒன்பது நாட்கள் பயணத்தை மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

புதிய நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்

ஆர். முத்துக்குமார் பழைய பாராளுமன்றம் 96 ஆண்டு பழமையானது. இங்கு தினமும் பல லட்சம் பேர் வந்து சென்றாக வேண்டிய சூழ்நிலையில் அதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு சேதமடைந்து சரிந்து விடக்கூடாது அல்லவா? அதை மனதில் கொண்டே 2010ல் அப்போதைய காங்கிரஸ் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி புதிய பாராளுமன்றத்தை அமைக்க முடிவெடுத்தது. டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இம்ரான் கைது, பாகிஸ்தானில் பதட்டம்

ஆர். முத்துக்குமார் பாகிஸ்தானில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் கைது செய்யப்படுவது நின்றபாடாக இல்லை! இம்முறை முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். 2018ல் பதவி ஏற்ற இம்ரான் 2022 ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் சில மணி நேரத்தில் செபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார். பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கர்நாடகா தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் எதிரொலிக்குமா?

ஆர். முத்துக்குமார் கர்நாடகத்தில் மிக பரபரப்பாக நடந்து கொண்டிருந்த தேர்தல் பிரச்சாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்து இன்று மக்கள் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய சட்டமன்றத் தேர்தலில் இம்முறை வாக்காளர்கள் புதிய எழுச்சியுடன் வாக்களித்து வருகிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சிக்கு தென் இந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே ஆட்சியில் இருந்ததை அறிவோம். இம்முறை தோற்று விட்டால் அதன் தாக்கம் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும். இதைப் புரிந்து கொண்ட பாரதீய ஜனதா […]

Loading