போஸ்டர் செய்தி

இன்று வைகுண்ட ஏகாதசி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை, ஜன. 6– இன்று வைகுண்ட ஏகாதசி. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என விண்ணதிர கோஷங்களை எழுப்பிக் கொண்டு சொர்க்க வாசல் வழியாக உள்ளே சென்று பெருமாளை தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பேயாழ்வார், திருமழிசை யாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோவிலில் […]

செய்திகள் போஸ்டர் செய்தி

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் நாளை பதவி ஏற்பு

சென்னை,ஜன.5– உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் நாளை பதவி ஏற்றுக்கொள்கின்றனர். தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு 11 ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஊராட்சி தலைவர், உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு நேரடியாக வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. 27 மாவட்டங்களில் உள்ள 515 […]

செய்திகள் போஸ்டர் செய்தி

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

சென்னை, ஜன.5– தமிழக சட்டசபை நாளை (திங்கள்கிழமை) கூடுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டம் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் 15–வது சட்டசபையின் 6வது கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 2–ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத் தொடரை தொடக்கி வைத்தார். இந்தக் கூட்டத் தொடர் ஜனவரி 8–ம் தேதி வரை நீடித்தது. இதன்பின்பு, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சட்டசபை கூட்டத் தொடர் […]

செய்திகள் போஸ்டர் செய்தி

இன்று ரூ.1000, பொங்கல் தொகுப்பு வினியோகம்

சென்னை, ஜன. 5– தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் பணத்தை அமைச்சர்கள் இன்று வழங்கி துவக்கினார்கள். தைப் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 26.11.2019 அன்று புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் அறிவித்தார். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, […]

செய்திகள் போஸ்டர் செய்தி

கையை இழந்த மாணவனுக்கு ரூ.2 லட்சம் உதவி – எடப்பாடி

சென்னை, ஜன.5– சமையல் கூடம் இடிந்து விழுந்ததில் வலது கையை இழந்த மாணவனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், பொன்னன்படுகை கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெருமழையின் காரணமாக பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடம் இடிந்து விழுந்ததில், 8–ம் வகுப்பு படித்து வந்த ரஞ்சித் குமார் என்பவரின் மகன் மாணவன் […]

செய்திகள் போஸ்டர் செய்தி

ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் – டிரம்ப்

வாஷிங்டன்,ஜன.5– ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் […]

போஸ்டர் செய்தி

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்: எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

சென்னை, ஜன.4– அண்ணா தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை 8.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. பி.எச். பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பி.எச்.பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி […]

போஸ்டர் செய்தி

உள்ளாட்சி தேர்தல் 100 சதவீதம் நேர்மையாக நடந்தது: மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி பேட்டி

சென்னை,ஜன.4– தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 100 க்கு 100 சதவீதம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும், எந்தவித பாரபட்சமும் இன்றி, எப்போதும் இல்லாத வகையில் எந்தவித முறைகேடு இல்லாமலும் நடத்தி முடிக்கப்பட்டது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி பெருமிதத்துடன் கூறினார். 18,570 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் […]

போஸ்டர் செய்தி

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கிரிக்கெட் போட்டி: எடப்பாடி பழனிசாமி ‘பேட்டிங்’ செய்து துவக்கி வைத்தார்

சென்னை, ஜன.4– குடிமைப்பணி அலுவலர்களுக்கான (ஐ.ஏ.எஸ்.) கிரிக்கெட் போட்டியை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, பேட்டிங் செய்து அதிகாரிகளை முதலமைச்சர் உற்சாகப்படுத்தினார். அமைச்சர் டி.ஜெயக்குமார், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வீசிய பந்தை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி பேட்டிங் செய்து அடித்து விளாசினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (4–ந்தேதி) சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மெரினா கிரிக்கெட் மைதானத்தில், தமிழ்நாடு அகில இந்திய குடிமைப்பணி மற்றும் மத்தியப் பணி அலுவலர்களுக்கான விளையாட்டுப் […]

போஸ்டர் செய்தி

இனிவரும் அனைத்து தேர்தலிலும் முழு வெற்றியை பெறுவோம்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உறுதி

சென்னை, ஜன.4– இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் முழு வெற்றியை பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதிபட கூறியுள்ளனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு தந்த வெற்றி மகத்தான மக்கள் பணிகளுக்கு கிடைத்த பரிசு என்று எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் நடைபெற்று […]