போஸ்டர் செய்தி

அனைவருக்கும் நவீன மருத்துவ வசதிகள் சென்றடைய வேண்டும்

மதுரை, நவ.11– நவீன மருத்துவ வசதிகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கூறினார். மதுரை வேலம்மாள் அறக்கட்டளை சார்பில் சிறந்த மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளுக்கு விருது வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடாஸ்காடர் அரங்கில் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கம் வரவேற்று பேசியதாவது:– வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், தென் தமிழகத்திற்கு தரமான, நேர்த்தியான மருத்துவத்தை குறைந்த செலவில் அளித்துக் கொண்டிருக்கிறது. தென் மாநில மக்களின் […]

போஸ்டர் செய்தி

மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை, நவ.10– மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர் மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இருவர் பேசிக்கொண்டதை தான் கேட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மதுரை மாநகர் மற்றும் ஊரகக் காவல்துறையினரை சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் உஷார்ப்படுத்தினர். இதையடுத்து ஊரக காவல்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர். அங்கு […]

போஸ்டர் செய்தி

தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய வாருங்கள்: ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னை, நவ.10– தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய வாருங்கள் என்று தொழில் அதிபர்களுக்கு இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய அரசு அனைத்து சலுகைகள், உதவிகளை செய்கிறது. அனைத்து வசதிகளும் உள்ளது என்று துணை முதல்வர் கூறினார். உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் (ஒய்ஐஜிஎப்) மற்றும் ஐக்கிய பொருளாதார மன்றம் ஆகியவை இணைந்து சென்னையில் இன்று இந்தியாவில் தொழில் மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான மாற்று மற்றும் புதிய நிதி ஏற்பாடுகள் […]

போஸ்டர் செய்தி

இலங்கை நாடாளுமன்றம் ‘திடீர்’ கலைப்பு: ஜனவரி 5-ந் தேதி தேர்தல் அறிவிப்பு

கொழும்பு, நவ.10- இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா நேற்று திடீரென்று கலைத்து உத்தரவிட்டார். அங்கு ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் சமீபத்தில் மோதலாக வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென்று நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார். ஆனால் தானே […]

போஸ்டர் செய்தி

காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஸ்ரீநகர்,நவ.10– ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிகுன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயங்கரவாதிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நடந்த இந்த […]

போஸ்டர் செய்தி

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்கள்

புதுடெல்லி,நவ.9– இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்கள் நேபாள போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்களை பிடித்த இந்திய பாதுகாப்பு படையினர் நேபாள நாட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். நேபாளத்தில் உள்ள ரூபைதீஹா எல்லை வழியாக இந்திய பகுதிக்குள், இரண்டு பெண்கள் உட்பட ஆறு சீன நாட்டவர்கள் நுழைந்தனர். இதைக்கவனித்த இந்திய பாதுகாப்பு படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது,நேபாள்கஞ்ச் பகுதியில் உள்ள பகேஷ்வரி கோவிலில் வழிபாடு நடத்த ஆறு பேரும் சென்றதும், […]

போஸ்டர் செய்தி

இன்று நடந்த மறுதணிக்கையில் சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்

சென்னை,நவ.9– நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் இன்று மறுத்தணிக்கை செய்யப்பட்டது. அப்போது சர்ச்சைக்குரிய காட்சிகள் முழுவதும் நீக்கப்பட்டது. புதிய காட்சிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. மறுதணிக்கை செய்யப்பட்ட படம் இன்று மதியம் முதல் திரையிடப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகியது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் […]

போஸ்டர் செய்தி

டெங்கு, பன்றி காய்ச்சலை குணப்படுத்த ரூ.90 கோடி மருந்துகள் கையிருப்பு

சென்னை, நவ.9– டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து காய்ச்சலுக்கும் சிகிச்சை அளிக்க 90 கோடி ரூபாய் மதிப்பில் 3 மாதங்களுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார். ஒரு நிமிடத்திற்குள் ரத்த அணுக்கள் எண்ணிக்கையை கண்டறியும் கருவிகள் 1100 அரசு மருத்துவமனையில் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். கொசு ஒழிப்பு பணிக்கு 20 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை, […]

போஸ்டர் செய்தி

கஸ்தூரிபா அரசு தாய் சேய் மருத்துவமனையில் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம், தாய்ப்பால் வங்கி

சென்னை:- சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம், தாய் சேய் நல மையம் (கர்ப்பிணிகளுக்கான ஆரோக்கிய உணவு, யோகா மற்றும் உடற்பயிற்சி செய்முறை), தாய்ப்பால் வங்கி ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் தாய் சேய் நல விழிப்புணர்வு பூங்கா, கண்காட்சி மற்றும் ஆண் மற்றும் பெண் பார்வையாளர்கள் தங்கும் அறைகளை பார்வையிட்டார். பின்னர் இம்மருத்துவமனையில் குழந்தைகள் […]

போஸ்டர் செய்தி

மகாராஷ்டிராவில் சரக்கு ரெயிலில் தீ விபத்து

மும்பை,நவ.9– மகாராஷ்டிர மாநிலத்தில் சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தகானு அருகே நேற்று இரவு ஒரு சரக்கு ரெயில் வந்துகொண்டிருந்தது. தகானு சாலை, வங்கான் ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் வந்தபோது, ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. இதில் 2 பெட்டிகள் கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பாதையில் இரு புறங்களிலும் செல்லக்கூடிய ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் […]