போஸ்டர் செய்தி

தமிழ்நாடு அரசுக்கு உலக வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன்

புதுடெல்லி, ஜூன்.5- தமிழ்நாடு சுகாதார திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. தமிழ்நாடு சுகாதார பணிகள் சீர்திருத்த திட்டம் ஒன்றை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துதல், தொற்றா நோய்களின் சுமையை குறைத்தல், தாய்மைப்பேறு, குழந்தைகள் மருத்துவ சேவையை மேம்படுத்துதல் ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கங்கள் ஆகும். இந்த திட்டத்தை அமல்படுத்த உலக வங்கி 28 கோடியே 70 லட்சம் […]

போஸ்டர் செய்தி

நாமக்கல் அரசுப் பள்ளியில் மகன், மகளை சேர்த்த நீதிபதி

நாமக்கல்,ஜூன்.5– நாமக்கலில் நீதிபதி ஒருவர் மகன், மகளை அரசு பள்ளியில் சேர்த்தது ஆச்சரியப்பட வைத்துள்ளது.நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1- ன் நீதிபதியாக இருப்பவர் வடிவேல். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கு இடமாறுதலாகி வந்தார். நாமக்கல்லில் வசித்து வரும் இவர், திருச்செங்கோடு சாலையில் உள்ள வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது மகள் ரீமாசக்தி மற்றும் மகன் நிஷாந்த்சக்தி ஆகியோருடன் வந்தார். இதைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை […]

போஸ்டர் செய்தி

காயிதே மில்லத் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர்ப் போர்வை

சென்னை, ஜூன் 5– காயிதே மில்லத்தின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள். சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, […]

போஸ்டர் செய்தி

பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

சென்னை,ஜூன்.5– இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாற்ற பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். புதிய கல்வி வரைவு கொள்கையில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை திருத்தம் செய்ததையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று, பிரதமர் மோடிக்கு தமிழ் மொழிக்காக கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டிருப்பதாவது:– இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக மாற்ற வேண்டும். […]

போஸ்டர் செய்தி

ரம்ஜான் பண்டிகை: தமிழகம் முழுவதும் மசூதிகளில் சிறப்பு தொழுகை

சென்னை, ஜூன் 5– இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய மார்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். இந்த பண்டிகை ஈகைத்திருநாள் என்றும், நோன்பு பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம் சமூகத்தினர் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். நேற்று(செவ்வாய்க்கிழமை) பிறை தெரிந்ததை தொடர்ந்து இன்று(புதன்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி முகமது சலாகுதீன் அய்யூப் […]

போஸ்டர் செய்தி

நாளை ‘ரம்ஜான்’: முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை, ஜூன்.4– புனித ரமலான் பெருநாளில், உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்திட வேண்டும் என்று இஸ்லாமிய சகோதரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘‘ரம்ஜான்” திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புனித ரமலான் மாதத்தின் 30 நாட்கள் இஸ்லாமியப் […]

போஸ்டர் செய்தி

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை

சென்னை,ஜூன்.4– முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆய்வுக்கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகள் கூடுதலாக பலன் பெறும் வகையில் செங்கழுநீர் மலை கல்குவாரிகளில் இருந்து குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார். தற்போது நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள மாடம்பாக்கம் ஏரி குடிநீர் திட்டப்பணிகள் மூலம் மாடம்பாக்கம், சிட்லபாக்கம் பகுதி மக்கள் பலன் பெறுவார்கள் என்று அவர் […]

போஸ்டர் செய்தி

‘‘சிறுபான்மை மக்களை காக்கும் கரங்களாக அ.தி.மு.க. அரசு திகழும்’’ ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை, ஜூன்.4– சிறுபான்மை மக்களை காக்கும் கரங்களாக அண்ணா தி.மு.க. அரசு திகழும் என்று சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். அண்ணா தி.மு.க. சார்பில் நேற்று மாலை 5.30 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாஜி கரீம்கனி கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை […]

போஸ்டர் செய்தி

மெகா கூட்டணியில் முறிவு: இடைத்தேர்தலில் தனித்துப்போட்டி; பகுஜன் தலைவர் மாயாவதி அறிவிப்பு

லக்னோ, ஜூன் 4:- மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்த எலியும் பூனையுமாக இருந்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்தன. மெகா கூட்டணி என்ற பெயரில் இந்த கட்சிகள் அங்குள்ள 80 மக்களவை தொகுதிகளில் 75 -இல் போட்டியிட்டன. ஆனால், இந்தக்கூட்டணி வெறும் 15 இடங்களில் மட்டுமே வென்றது. போதிய அளவு மக்கள் ஆதரவு இல்லாததால் படுதோல்வியை இந்தக்கூட்டணி சந்தித்தது. இதனால், இரு கட்சிகள் இடையே மனக்கசப்பு நிலவியது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக (9), […]

போஸ்டர் செய்தி

அசாமில் 13 பேருடன் காணாமல் போன போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்

அசாம், ஜூன் 4– அசாம் மாநிலத்தில் இருந்து, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக விமானம், நேற்று காணாமல் போன நிலையில், விமானத்தை தேடும் பணி இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. அசாம் மாநிலம் ஜோா்காட் நகர் விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்று பகல் 12.25 மணிக்கு அருணாச்சல் பிரதேச மாநிலம், மெஞ்சுகா விமானப்படை தளத்துக்கு ஏ.என்.32 ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில், 8 விமானிகளும், 5 பயணிகளும் என 13 போ் பயணித்தனர். இந்த […]