போஸ்டர் செய்தி

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை, செப். 12– இங்கிலாந்தில் உள்ளதுபோல தமிழகத்திலும் ஹெலிகாப்டர் மருத்துவ சேவை செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கேள்வி: சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்த்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்? நீங்கள் கேரளா சென்று முதலமைச்சரை சந்திக்க போகிறீர்களே, இதை வலியுறுத்துவீர்களா? பதில் : கேரள முதலமைச்சரை சந்திக்கின்றபோது பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். ஆகவே தற்போது பேச முடியாது, போய்விடடு வந்தபின் […]

போஸ்டர் செய்தி

விவசாயிகளுக்கான பென்ஷன் திட்டம்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சென்னை, செப். 12 சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2019 -20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தது. அந்த திட்டத்தை இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை துவக்கி வைப்பதற்கு முன்னதாக ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு தலைநகர் ராஞ்சியில் 39 ஏக்கர் பரப்பளவில் ரூ.465 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 3 தளங்கள் கொண்ட […]

போஸ்டர் செய்தி

எங்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை, செப். 12– தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டினீர்கள், எத்தனை ஏரிகள், குளங்களை தூர்வாரினீர்கள் என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேட்டார். எங்களை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது என்றும் முதல்வர் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அனைவரும் அன்போடு என்னை வரவேற்றார்கள். அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல வெளிநாடு […]

போஸ்டர் செய்தி

நளினியின் பரோலை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, செப். 12– முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். […]

போஸ்டர் செய்தி

காஷ்மீரில் வெடி மருந்து ஏற்றி வந்த லாரி பறிமுதல்

ஸ்ரீநகர், செப். 12 காஷ்மீரில் வெடி மருந்தை ஏற்றி வந்த லாரி ஒன்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் சாசனம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் ஜம்மு […]

போஸ்டர் செய்தி

ஜெயலலிதா நினைவிடத்தில் நடந்த திருமணம்

சென்னை, செப்.11– சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று காலை தனது மகன் திருமணத்தை தென்சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் செயலாளர் எஸ்.பவானிசங்கர் நடத்தினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், அண்ணா தி.மு.க. ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான அ.தமிழ்மகன் உசேன், அண்ணா தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுலஇந்திரா ஆகியோர் இந்த திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள். தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் செயலாளரும், முன்னாள் […]

போஸ்டர் செய்தி

அண்ணா சிலைக்கு 15–ந் தேதி எடப்பாடி, ஓ.பி.எஸ். மாலை அணிவிக்கிறார்கள்

சென்னை, செப்.11– அண்ணாவின் 111–வது பிறந்தநாளையொட்டி 15–ந் தேதி அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இதுகுறித்து அண்ணா தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– பேரறிஞர் அண்ணாவின் 111–வது பிறந்த நாளான 15–ந் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவினுடைய திருஉருவச் சிலைக்கு, அண்ணா தி.மு.க. […]

போஸ்டர் செய்தி

உத்தரபிரதேசத்தில் கால்நடைகள் நோய் தடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

லக்னோ,செப்.11– உத்தரபிரதேசத்தில் கால்நடைகளுக்கான நோய் தடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய் நோயான புருசெல்லோசிஸை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசத்தில் தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த விழாவில் கலந்துக் கொள்ள மதுராவிற்கு மோடி வருகை தந்தார். அவரை உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொடுத்து வரவேற்றார். பின்னர் அப்பகுதியில் […]

போஸ்டர் செய்தி

சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்

புதுடெல்லி,செப்.11– காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதனால் காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் […]

போஸ்டர் செய்தி

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு

அமராவதி,செப்.11– ஆந்திராவில் ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேரணி செல்ல முயன்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, அவரது மகன் மற்றும் கட்சி முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றது முதல் தற்போது வரை, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில், கர்னுல் மாவட்டத்தில் உள்ள அதம்கூர் நகரில், பேரணி […]