போஸ்டர் செய்தி

‘கஜா’ புயல்: 24 மணி நேரமும் முழு கண்காணிப்பு

சென்னை, நவ.15– ‘கஜா’ புயலை எதிர்கொள்ள 24 மணி நேரமும் முழு கண்காணிப்பு உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். ‘கஜா’ புயலினை எதிர்கொள்ள மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:– கஜா புயலானது, மேற்கு மத்திய, கிழக்கு மத்திய மற்றும் தென் வங்கக்கடலில் உருவாகி, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் […]

போஸ்டர் செய்தி

பாம்பன்–கடலூர் இடையே நாகையில் இரவு 11.30 மணிக்கு ‘கஜா’ புயல் கரையை கடக்கும்

சென்னை,நவ.15– பாம்பன்–கடலூர் இடையே நாகை அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கஜா புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:– வங்க கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல், […]

போஸ்டர் செய்தி

இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ரகளை

கொழும்பு,நவ.15– இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜபக்சே பதவி பறிப்பு தீர்மானம் செல்லாது என இன்று ரகளையில் ஈடுபட்ட அவரது ஆதரவு எம்.பி.க்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை தாக்கச் சென்றனர். இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதை ஏற்க மறுப்பதாக அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் அறிவித்தனர். இந்நிலையில், பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று மீண்டும் சமர்பிப்பதாகவும், […]

போஸ்டர் செய்தி

ரூ.50 கோடி செலவில் புயல் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்பு

சென்னை, நவ. 15– வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புயல் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்பினை (Early warning system) சோதனை அடிப்படையில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சென்னை, சேப்பாக்கம் மாநில கட்டுப்பாட்டு மையத்தில் தொடங்கி வைத்தார். பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றம் என்பது மிக முக்கிய செயல் என்பதால் பேரிடர் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு உரிய காலத்தில் எச்சரிக்கை தகவல்களை தெரிவிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்புகள் […]

போஸ்டர் செய்தி

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு மற்றும் காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக இஸ்ரோ ‘ஜிசாட்–29’ என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3– டி2 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இது இந்தியாவின் 13–வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். அதோடு நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரயோஜெனிக்’ என்ஜின் பொருத்தப்பட்ட 10–வது ராக்கெட்டாகும். நேற்று மாலை 5 மணி 8 […]

போஸ்டர் செய்தி

தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்

சென்னை,நவ.14– கஜா புயல் நெருங்குவதால் சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர மாவட்டங்களில் பெரும் பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாகை, கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் கடந்த வாரம் புதன்கிழமை அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது கடந்த 11- ந் தேதி புயல் சின்னமாக மாறியது. அந்த புயலுக்கு இலங்கை அறிவித்த “கஜா” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. […]

போஸ்டர் செய்தி

சுகாதாரத் துறையில் ரூ.36 கோடி கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்தார்

சென்னை, நவ.14– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (14–ந் தேதி) சென்னை, எழும்பூர், குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் 35 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, நவீன இருதய சிகிச்சை மையத்தின் தோரண நுழைவு வாயில், நவீன இருதய சிகிச்சை அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அமர்வதற்கான நவீன ஒலி –ஒளி அரங்கம், குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு […]

போஸ்டர் செய்தி

அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெயலலிதா சிலை

சென்னை, நவ.14- சென்னையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் புதுப்பிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு இன்று (புதன்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்த நிலையில், அவரது 70-வது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவரது […]

போஸ்டர் செய்தி

தொழில் முதலீட்டுக்கு சாதகமான நாடு இந்தியா

சிங்கப்பூர்,நவ.14– சிங்கப்பூரில் நடைபெற்ற பின்டெக் விழாவில் பேசிய இந்திய பிரதமர் மோடி, முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற பின்டெக் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை உரையாற்றினார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-– உலக நிதி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது. 130 கோடி மக்களின் வாழ்க்கையை இந்த புரட்சி மாற்றி உள்ளது. உலக பொருளாதாரத்தின் வடிவம் மாறி […]

போஸ்டர் செய்தி

நேரு நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் சிங் மரியாதை

புதுடெல்லி,நவ.14– ஜவகர்லால் நேருவின் 129 வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் […]