போஸ்டர் செய்தி

அமெரிக்கா–ஈரான் இடையே போர் பதட்டம்: விமானம் தாங்கி போர்க் கப்பலை அனுப்பினார் டிரம்ப்

வாஷிங்டன்,மே.10– ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, விமானம் தாங்கி போர் கப்பலை அனுப்பியிருப்பதால் மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஆண்டு மே மாதம் 8- ந் தேதி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவின் […]

போஸ்டர் செய்தி

உள்ளாட்சி தேர்தலுக்கான வழிமுறைகள் வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை,மே.10– உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து இந்த தேர்தலுக்கான தயார் வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தயார் வழிமுறைகள் தொடர்பான அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் மாவட்டம், ஊராட்சி, ஒன்றியம் வாரியாக வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான அனைத்து தயார் நிலைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் […]

போஸ்டர் செய்தி

‘என்னை வாய்க்கு வந்தபடி தப்புத் தப்பா திட்டுகிறார்’: கவுதம் கம்பீர் மீது பெண் வேட்பாளர் ‘பகீர்’ புகார்

புதுடெல்லி, மே. 10– புதுடெல்லி கிழக்கு தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் கவுதம் காம்பீர் (கிரிக்கெட் வீரர்) தன்னை கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்து, துண்டு பிரசுரம் வினியோகித்ததாக ஆம் ஆத்மி கட்சி பெண் வேட்பாளர் அதிஷி கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து இந்தப் புகார் ஆம் ஆத்மி கட்சியால் வேண்டுமென்றே சொல்லப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது என்று மறுத்த கவுதம் கம்பீர், பெண் வேட்பாளர் அதிஷி மற்றும் கட்சி நிர்வாகிகள் இருவருக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். […]

போஸ்டர் செய்தி

புதிய ஆட்சி அமைப்பதில் மம்தா முக்கிய பங்கு வகிப்பார்: சந்திரபாபு நாயுடு தகவல்

கொல்கத்தா,மே.10– புதிய ஆட்சி அமைப்பதில் மம்தா பானர்ஜியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று மேற்கு வங்க மாநிலம் சென்றார். அங்கு அவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். புதிய ஆட்சியை அமைப்பதில் மாநில கட்சிகள் எத்தகைய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதன் பிறகு மம்தா பானர்ஜியும், சந்திரபாபு […]

போஸ்டர் செய்தி

தலைகீழாக நின்றாலும் ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது : ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

மதுரை, மே 9– மக்கள் விரோத தி.மு.க.வை மக்கள் என்றோ வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இனிமேல் ஸ்டாலின் தலைகீழாக நின்றாலும் முதலமைச்சராக வர முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். திருப்பரங்குன்றம் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டிக்கு வாக்கு சேகரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரிய ஆலங்குளம், நிலையூர், ஆரியப்பட்டி, கனக்கன்குளம், வேடர் புளியங்குளம், தென்புழஞ்சி, வடபுழஞ்சி, நாகமலை புதுக்கோட்டை முதலிய இடங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். துணை முதலமைச்சர் சென்ற […]

போஸ்டர் செய்தி

ஐஎன்எஸ் விராட் கப்பலை சுற்றுலாவுக்கு பயன்படுத்திய ராஜீவ் காந்தி குடும்பத்தினர்

புதுடெல்லி,மே.9– ஐ.என்.எஸ். விராட் கப்பலை தங்கள் சொந்த டாக்சியாக சுற்றுலாவுக்கு ராஜீவ் காந்தி குடும்பத்தினர் பயன்படுத்தினர் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் அவர் அரியானா மாநிலம் பாதேகாபாத், குருசேத்திரம் மற்றும் டெல்லியின் ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய மோடி பாதுகாப்பு படைகளை வலுவாக்காமல் ஒரு நாடு எப்படி வல்லரசாகும் என்றார். தேர்தல் பிரச்சாரத்தில் எந்த இடத்திலும் ராணுவம் குறித்து […]

போஸ்டர் செய்தி

13 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு ஏன்? சத்யபிரதா சாகு விளக்கம்

சென்னை,மே.9– வாக்குப்பதிவுக்கு முந்தைய மாதிரி ஓட்டுப்பதிவை நீக்க தவறியது உள்ளிட்ட காரணங்களால் 13 ஓட்டுச்சாவடிகளில் மறு தேர்தல் நடக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:– வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து ஏப்ரல் 29 ல் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்தோம். தேர்தலுக்கு முந்தைய மாதிரி ஓட்டுப்பதிவுகள் அகற்றப்படவில்லை. ஓட்டு எண்ணிக்கையின் போது பிரச்சினை ஏற்படும். இதனால், 13 ஓட்டுச்சாவடிகளில் மறு தேர்தல் […]

போஸ்டர் செய்தி

ராகுல் குடியுரிமை விவகாரம்: தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

புதுடெல்லி,மே.9– காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றவர். இதனால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐரோப்பிய நாடான, பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதாக, சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில், ஜெய் பகவான் கோயல், சி.பி.தியாகி ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:– தற்போதைய […]

போஸ்டர் செய்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி,மே.9– ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது பற்றி ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்களை விடுவிக்கும்படி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதன் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் […]

போஸ்டர் செய்தி

‘ஜெயலலிதா மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம்’: முதல்வர் எடப்பாடி தாக்கு

தூத்துக்குடி, மே.8– அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குக் காரணம் தி.மு.க. தான். அம்மா மீது பொய் வழக்குப் போட்டு, அவரை சிறைக்கு அனுப்பி, அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, உடல் நிலை நலிவுற்றதன் காரணமாகவே அம்மா மரணமடைந்தார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. மீது புகார் கூறினார். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைக் குளம், மாப்பிள்ளையூராணி, முத்தையாபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கழக வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து, முதலமைச்சரும் கழக இணை […]