செய்திகள் போஸ்டர் செய்தி

நோயின் தாக்கம் புரியாமல் வெளியே நடமாடுகிறார்களே? எடப்பாடி பழனிசாமி வேதனை

அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு: சாப்பிட்டு பார்த்து தரத்தை பரிசோதித்தார் தினசரி 4½ லட்சம் பேர் உணவு அருந்துகிறார்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்யும் * வெளிநாட்டினர் பலர் மருத்துவமனையில் துடிதுடிக்கும் காட்சியை பார்க்கிறோம் * அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியம் * எனவே சட்டத்தை மக்கள் மதித்து நடக்க வேண்டும் நோயின் தாக்கம் புரியாமல் வெளியே நடமாடுகிறார்களே? எடப்பாடி பழனிசாமி வேதனை அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர மீண்டும் வேண்டுகோள் […]

செய்திகள் போஸ்டர் செய்தி

தமிழகத்தில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: எண்ணிக்கை 125 ஆக உயர்வு

டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்கள் தமிழகத்தில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: எண்ணிக்கை 125 ஆக உயர்வு சென்னை, ஏப். 1 டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 50 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்தவர். இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி […]

செய்திகள் போஸ்டர் செய்தி

கிழக்கு ஆசியா, பசிபிக் நாடுகளில் வறுமையில் தள்ளப்படும் 1 கோடியே 10 லட்சம் பேர்

‘கொரோனா’: கிழக்கு ஆசியா, பசிபிக் நாடுகளில் வறுமையில் தள்ளப்படும் 1 கோடியே 10 லட்சம் பேர் உலக வங்கி அதிர்ச்சி தகவல் லண்டன், ஏப்.1– ‘உயிர்க்கொல்லி’ கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1 கோடியே 10 லட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்குவார்கள் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. சீனாவில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக […]

செய்திகள் போஸ்டர் செய்தி

டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீடிப்பு

நேற்றுடன் ஓய்வு பெற்ற  டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீடிப்பு எடப்பாடி பழனிசாமி உத்தரவு சென்னை, ஏப்.1– நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற அரசு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மேலும் 2 மாதம் தற்காலிக பணி தொடர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர், […]

செய்திகள் போஸ்டர் செய்தி

“நான் உங்கள் முதலமைச்சர் பேசுகிறேன்”: செல்போன் அழைப்பு மூலம் எடப்பாடி பழனிசாமி விழிப்புணர்வு

சென்னை, ஏப்.1- செல்போன் அழைப்பு மூலம் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சிலருக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்த உடனேயே, ‘நான் உங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன்’ என்று கூறியதும் சிலர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த அழைப்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆடியோ வடிவில் பதிவு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் உரை 28 வினாடிகள் நீடித்தது. […]

செய்திகள் போஸ்டர் செய்தி

6-வது நாளாக வெறிச்சோடி காணப்படும் மாமல்லபுரம்

காஞ்சீபுரம், மார்ச் 31 – கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி உள்ளது. சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காட்சி அளித்து வருகிறது. ஊரடங்கின் 6-ம் நாளான நேற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடியே உள்ளன. […]

செய்திகள் போஸ்டர் செய்தி

144 தடையை மீறியதாக 5 நாட்களில் 54,400 பேர் மீது வழக்கு

* ரூ. 11 லட்சம் அபராதம் வசூல் * 34,119 வாகனங்கள் பறிமுதல் 144 தடையை மீறியதாக 5 நாட்களில் 54,400 பேர் மீது வழக்கு   சென்னை, மார்ச். 31– 144 தடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 5 நாட்களில் 54 ஆயிரத்து 400 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் அபராதமாக ரூ. 10 லட்சத்தை வசூலித்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் […]

செய்திகள் போஸ்டர் செய்தி

தமிழகத்தில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆனது சென்னை, மார்ச்.31- இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 74 ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 67 ஆக இருந்தது. இன்று 7 பேருக்கு […]

செய்திகள் போஸ்டர் செய்தி

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு: மம்தா அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு: மம்தா அறிவிப்பு கொல்கத்தா, மார்ச் 31– மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசாரை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 லட்சத்திற்கு காப்பீடு வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்தியாவில் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் இது தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் மேற்கு […]

செய்திகள் போஸ்டர் செய்தி

பிரதமர் நிதிக்கு நன்கொடை குவிகிறது: ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறார் ஜனாதிபதி

பிரதமர் நிதிக்கு நன்கொடை குவிகிறது: ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறார் ஜனாதிபதி பாலிவுட் நடிகர்களும் ஏராளமான நிதி உதவி புதுடெல்லி, மார்ச்.30- கொரோனா வைரசுக்கு எதிரான போரில், பிரதமர் நிதிக்கு நன்கொடை குவிகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார். இந்தி திரையுலகினர் தாராள நிதி உதவியை அறிவித்தவண்ணம் உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்து நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக எல்லா தொழில்களும், […]