போஸ்டர் செய்தி

ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி 30–ந்தேதி பதவி ஏற்கிறார்

ஐதராபாத், மே.24- ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி 30-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடந்து வந்தது. அங்கு 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடந்தது. அதில் தெலுங்குதேசம் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அவர்களை எதிர்த்து ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். […]

போஸ்டர் செய்தி

வாரணாசி தொகுதியில் 4¾ லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மோடி அமோக வெற்றி

வாரணாசி, மே 24– வாரணாசி தொகுதியில் 4¾ லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா 5 லட்சத்து 57 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2–வது தடவையாக போட்டியிட்டார். அவரைத் தவிர மேலும் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஷாலினி யாதவ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜய் ராய் ஆகியோர் […]

போஸ்டர் செய்தி

மம்தா கோட்டையை தகர்த்த நரேந்திர மோடி

கோல்கட்டா,மே.23– திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை பா.ஜ.க. தகர்த்துள்ளது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரசுக்கு தான் செல்வாக்கு அதிகம். 2014 மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் இந்த முறை மம்தாவின் செல்வாக்கை உடைக்க மேற்குவங்கத்தில் அமித்ஷாவும், மோடியும் தீவிர பிரச்சாரம் செய்தனர். அமித்ஷாவின் பிரச்சாரத்தை தடுப்பதற்காக பல […]

போஸ்டர் செய்தி

ஆந்திரா சட்டமன்ற தேர்தல்: ஆட்சியை பிடித்தார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தார். ஆளும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று […]

போஸ்டர் செய்தி

எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் ஆதரவு

சென்னை, மே 23– இடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா தி.மு.க. ஆட்சி தொடர மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். 12.30 மணி நிலவரப்படி தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் 11 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. முன்னிலையில் உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பின்னடைவை ஏற்படுத்திய போதிலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க.வுக்கு வெற்றி அளித்து ஆட்சி தொடர ஆதரவு அளித்துள்ளார்கள். நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதி […]

போஸ்டர் செய்தி

மக்களவை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி

புதுடெல்லி, மே 23– பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கடந்த 2014ம் ஆண்டு பெற்ற தொகுதிகளை விட இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகளை வென்று சாதனை படைத்துள்ளது. மோடி 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றன. கடந்த 19–ந் தேதி இறுதி கட்ட தேர்தல் நிறைவடைந்தது. இந்தநிலையில் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதே போல் […]