போஸ்டர் செய்தி

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி

மேட்டூர்,ஜூலை.19– டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வழிபாடு நடத்தி மலர் தூவி தண்ணீரை திறந்துவிட்டார். அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியையும், அரசுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். தமிழகத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 12 […]

போஸ்டர் செய்தி

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேண்டுமென்றே அரசு மீது குற்றம் சுமத்துகிறார்கள்

கோவை, ஜூலை 19– டெண்டரில் எந்தவித முறைகேடும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேண்டுமென்றே அரசு மீது குற்றம் சுமத்துகிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். கேள்வி: ஸ்டாலின் பசுமை வழிச்சாலையை பற்றி தெரிவித்திருக்கிறாரே? பதில் : கிட்டத்தட்ட 85 சதவீதம் நில அளவுப் பணி முடிவுற்றுள்ளது. இன்னும் 15 சதவீத பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருசில நில உரிமையாளர்கள் தங்களுடைய ஆதங்கத்தை […]

போஸ்டர் செய்தி

வாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா காந்தி

புதுடெல்லி,ஜூலை.19– காங்கிரஸ் ஆட்சியின் போது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்படும் என அளித்த வாக்குறுதியை சோனியா நிறைவேற்றவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிமுகபடுத்திய சவுபாக்யா திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் மத்தியில் பிரதமர் பேசியதாவது:– இந்தியாவை முன்னர் ஆட்சி செய்த அரசுகள் வாக்குறுதிகள் அளித்தன. ஆனால், அவற்றை நிறைவேற்ற தவறிவிட்டன. முந்தைய ஆட்சியின் போது, 2009க்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு கொடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவராக […]

போஸ்டர் செய்தி

பா.ஜ.கவுக்கு எதிராக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அண்ணா தி.மு.க ஆதரிக்காது

சேலம்,ஜூலை.19– ஆந்திர பிரச்சினைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அண்ணா தி.மு.க ஆதரிக்காது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தண்ணீரை திறந்து விட்டார். மேட்டூர் அணையை திறந்து வைத்தபின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடைமடை செல்லும் அளவுக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் அணை வற்றும்போது விவசாயிகள் […]

போஸ்டர் செய்தி

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி

சேலம், ஜூலை 19– மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நேற்று 1.20 லட்சம் கன அடி காவிரி நீர்வந்த […]

போஸ்டர் செய்தி

சத்தீஸ்கர் வனப்பகுதியில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுகொலை

ராய்ப்பூர்,ஜூலை.19– சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளின் ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில், தண்டேவாடா–-பிஜப்பூர் எல்லையில் உள்ள டைம்னார் வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் படை மற்றும் அதிரடிப் படை வீரர்கள் இன்று காலை ரோந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை […]

போஸ்டர் செய்தி

கைக் குழந்தைக்கு பாலூட்டியபடி நடைபோட்ட இளம் மாடல் அழகி

மியாமி, ஜூலை 18– அமெரிக்க இளம் மாடல் அழகி மாரா மார்ட்டின். கடந்த ஞாயிற்றுக்கிழமை மியாமியில் நடந்த அழகிகள் அணிவகுப்பு போட்டியில் பங்கேற்றார். ஒரு கட்டத்தில் நீச்சல் உடையில் (கீழே ஜட்டி, மேலே மார்பு கச்சை) மேடையில் தோன்றி அழகு ஒய்யார நடை போட்டு வந்தவர், இப்போது வாட்ஸ்ஆப் படங்கள் மூலம், பத்திரிகைகளில் வெளி வந்திருக்கும் படங்கள் மூலம் பிரபலமான கையோடு சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார். அழகு நடைபோட்டு ஒய்யாரமாக ‘கேக் வாக்’ நடந்தவர், கையில் தன் […]

போஸ்டர் செய்தி

3–வது நாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சைக்கிள் பேரணி

மதுரை,ஜூலை.18– முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி ஜெயலலிதா பேரவை சார்பில் இன்று 3–வது நாள் திருமங்கலத்தில் இருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சைக்கிள் பிரச்சாரத்தை துவக்கினார். ராயபாளையத்தில் உள்ள கண்மாயை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தூர்வாரும் பணி நடைபெற்றது. தொடர்ந்து திருமங்கலம் வழியாக சைக்கிளில் சென்ற போது ஏராளமான கிராம பெண்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று அமோக ஆதரவு தெரிவித்தனர். அவர்களிடத்தில் அமைச்சர் […]

போஸ்டர் செய்தி

பிரதமர் மோடி அரசுக்கு எதிராக முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்

புதுடெல்லி,ஜூலை.18– பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்,தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்துள்ளன. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிய நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக மத்திய அரசு நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது. அப்போது அனைத்துக்கட்சிகளும் எழுப்புகிற பிரச்சினைகளுக்கு அரசு முக்கியத்துவம் வழங்குவதாகவும், நாட்டின் நலனைக் […]

போஸ்டர் செய்தி

நொய்டாவில் அடுத்தடுத்து 6 மாடி கட்டடங்கள் சரிந்தது

லக்னோ, ஜூலை 18– நொய்டா அருகே உள்ள சபேரி என்ற கிராமத்தில், ஆறு தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் திடீரெனச் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ளது சபேரி கிராமம். இங்கு, நேற்றிரவு 10 மணியளவில் ஏதோ நொறுங்கியது போன்று பெரும் சத்தம் கேட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சபேரி கிராமத்தில் ஆறு தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று அதன் […]