போஸ்டர் செய்தி

ஆந்திராவில் ஓங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் பேத்தாய் புயல்

சென்னை,டிச.15– சென்னை அருகே உருவாகியுள்ள பேத்தாய் புயலால் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் ஆந்திராவில் ஓங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டி உள்ளது. மணிக்கு […]

போஸ்டர் செய்தி

எல்லா துறைகளும் வளர்ச்சி பாதையில் செல்கின்றன

சேலம், டிச. 14– எல்லா துறைகளும் வளர்ச்சி பாதையில் செல்கின்றன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலத்தில் நேற்று நடைபெற்ற, பல்வேறு திட்டங்கள், சீர்மிகு நகரத் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:– இந்த ராசியான மாநகராட்சிக்கு என்னென்ன திட்டங்கள் வேண்டுமோ அத்தனை திட்டங்களையும் வாரி வழங்கியவர் முதலமைச்சர் மறைந்த அம்மா. அவருடைய காலத்தில் தான் […]

போஸ்டர் செய்தி

ரபேல் விமானங்கள் வாங்கியதில் சந்தேகம் இருப்பதாக கருதவில்லை

புதுடெல்லி, டிச.14– பிரான்ஸில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கியதில் எந்தவிதமான சந்தேகமும் இருப்பதாக கருதவில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.58 ஆயிரம் கோடிக்கு அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும், விமான […]

போஸ்டர் செய்தி

வங்கக்கடலில் ‘பேத்தாய்’ புயல் – உருவானது: மழை எச்சரிக்கை

சென்னை,டிச.14– வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகியிருப்பதால் வட தமிழகத்தில் 15, 16 ந் தேதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 16- ந் தேதி வங்கக்கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி கடுமையான பேரழிவை ஏற்படுத்தியது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் வேரோடு […]

போஸ்டர் செய்தி

எத்தனை கட்சிகள் எதிர்த்து நின்றாலும் முறியடிப்போம்

சேலம், டிச.14– எத்தனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வந்தாலும் அத்தனையையும் மக்கள் துணையுடன் முறியடிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அம்மாவின் ஆட்சி 10 நாள் தாக்கு பிடிக்காது, 6 மாதத்தில் காணாமல் போய்விடும் என்று சொன்னார்கள். ஆனால் இன்று அம்மாவின் ஆட்சி 2வது ஆண்டாக பீடு நடைபோடுகிறது என்றும் முதலமைச்சர் கூறினார். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்ற இடமெல்லாம் மக்கள் எழுச்சி வரவேற்பு கொடுத்தார்கள். பள்ளி […]

போஸ்டர் செய்தி

சேலத்தில் ரூ.25 லட்சம் செலவில் மின்னணு ஏல மையம், மதுரையில் தாய்கோ வங்கி கிளை

சென்னை, டிச.13– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (12–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், சேலம், சேகோசர்வில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு ஏல மையம் மற்றும் மதுரையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தாய்கோ வங்கியின் புதியதாக அமைக்கப்பட்ட 47வது கிளை ஆகியவற்றை திறந்து வைத்தார். சேகோ சர்வ் என அழைக்கப்படும் சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழிற் கூட்டுறவு சங்கமானது, […]

போஸ்டர் செய்தி

நாளை புயலாக மாறும் காற்றழுத்த மண்டலம்

சென்னை,டிச.13– தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுவதால் வருகிற 15, 16 -ந் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறி நாளை சென்னை மற்றும் வடதமிழகம் நோக்கி […]

போஸ்டர் செய்தி

‘கஜா’ புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2 லாரிகளில் 30 டன் அரிசி

சென்னை, டிச.13– கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் சார்பில் இரண்டு லாரிகளில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 30 டன் எடையுள்ள அரிசியினை கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழக தலைமை நிலைய செயலாளர், சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பயணியர் மாளிகை அருகில் இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார். சேலம் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஏற்கனவே ரூ.1.50 கோடி மதிப்பிலான […]

போஸ்டர் செய்தி

1 லட்சம் வீடுகள் கட்டித் தருவோம்

சேலம், டிச.13– கஜா புயலில் வீடு இழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தருவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (13–ந்தேதி), சேலத்தில் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். சேலம் மாவட்டத்தின் சார்பாக, சேலம் புறநகர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஏற்கனவே ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்றையதினம், புதுக்கோட்டைக்கு, நிவாரணமாக இரண்டு […]

போஸ்டர் செய்தி

ரூ.143 கோடி செலவில் பள்ளிக் கட்டிடங்கள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (12–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஈரோடு மாவட்டம், செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வகத்துடன் கூடிய 4 வகுப்பறைக் கட்டடம், கலை மற்றும் ஓவிய அறை, கணினி அறை மற்றும் நூலக அறை ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் […]