செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நீதி கேட்டு நடத்திய பயணத்துக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜன.9– பில்கிஸ் பானு வழக்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:– சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பாரதீய ஜனதா அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் லாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. தங்களுக்கு வேண்டியவர்கள் […]

Loading

செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனையில்‌ மூளைச்சாவு அடைந்த நோயாளி உறுப்புகள்‌ தானம்‌

சென்னை, ஜன. 9– அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்‌ மூளைச்சாவு அடைந்த நோயாளியின்‌ உறுப்புகள்‌, அவர்களது குடும்பத்தினரால்‌ தானம்‌ செய்யப்பட்டது. சென்னை புழல்‌, என்எஸ்கே தெருவை சேர்ந்த பத்மா (வயது 42) 100 நாள்‌ வேலை செய்து கொண்டு வீட்டை பராமரித்து வந்தார்‌. இவரது கணவர்‌ பிரேம்குமார்‌ (வயது 53) மற்றும்‌ மகன்‌ ரித்திக்‌ ஜாய்‌ (வயது 14) அனைவரும்‌ சேர்ந்து வசித்து வந்தனர்‌. கடந்த 4.1.24 பிற்பகல்‌ 2.40 மணியளவில்‌ தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று இரு […]

Loading

செய்திகள்

இன்று தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன. 9– ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]

Loading

செய்திகள்

விஜயகாந்த் உருவ படத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் அஞ்சலி

பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆறுதல் சென்னை, ஜன.9- மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்ற மத்திய மந்திரி பியூஸ் கோயல், விஜயகாந்த் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28-ந்தேதி அதிகாலை மரணம் அடைந்தார். இந்த நிலையில், தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த விஜயகாந்த் வீட்டிற்கு நேற்று நேரில் சென்றார். அங்கு, விஜயகாந்த்தின் உருவ […]

Loading

செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா 16-ந்தேதி திறந்திருக்கும்

வண்டலூர், ஜன.9- சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். வருகிற பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16-ந்தேதி செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் வருவதால் அன்றைய தினம் வண்டலூர்பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களான பிளாஸ்டிக், மற்றும் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், கரும்பு, புகையிலை பொருட்கள், மது பொருட்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். […]

Loading

செய்திகள்

முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6½ லட்சம் கோடி ஒப்பந்தம்; 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஸ்டாலின் தகவல் சென்னை, ஜன.9–- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி யுள்ளது. இதன் மூலம் 27 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.83 லட்சம் கோடி) உயர்த்துவதை இலக்காக கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தமிழ்நாடு […]

Loading

செய்திகள்

தொழில் முதலீடுகளை மேலும் ஈர்க்க மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா பயணம்

சென்னை, ஜன.9-– தொழில் முதலீடுகளை மேலும் ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவை தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இலக்கு பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, அனை வருக்கும் எல்லாம் என்பது தான். தி.மு.க. ஆட்சியில், தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக மகத்தான வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் […]

Loading

செய்திகள்

தமிழகப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய 174 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

சென்னை, ஜன.9-– உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய 174 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு 174 நிறுவனங்களுடன் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா, […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் தில்லுமுல்லுகளை தடுக்க அடுத்த தலைமுறை நவீனங்கள்?

ஆர்.முத்துக்குமார் நடப்பு ஆண்டு சர்வதேச அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரும் சூழ்நிலை தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் நமது நாடு உட்பட உலகில் உள்ள 74 நாடுகளில் தேர்தல் மூலம் இந்தாண்டு புது தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாற்றம் தான் நிரந்தரம் என்பதை தேர்தல் களம் பலமுறை நமக்கு நிரூபித்து வருகிறது. இவ்வாண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்தல்களில் யார் யார் தலைத்தப்பும்? புதிய தலைவர் யார் பதவியில் அமருவார்கள்? போன்ற கேள்விகளும், விவாதங்களும் […]

Loading

செய்திகள்

வங்கதேச நாடாளுமன்ற தேர்தல்: கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வெற்றி

மகுரா, ஜன. 8– வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஷகிப் அல் ஹசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காசி ரெசல் ஹூசனை விட 1,50,000 வாக்குகள் அதிகம் […]

Loading