செய்திகள்

இந்தியாவில் நாளை முதல் சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடுகள் அமல்

டெல்லி, நவ. 30– இந்தியாவில் நாளை முதல் சிம் கார்டு விற்பனை மற்றும் வாங்க புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவில் சிம் கார்டு வாங்குவதற்கும் விற்பதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. நாட்டில் இணைய குற்றங்களை தடுக்கும் நோக்கில் மொபைல் சிம் கார்டு விற்பனையில் ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளை ஆகஸ்ட் மாதமே அறிமுகப்படுத்தியது. அந்த புதிய விதிமுறைகள் நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இது டிசம்பர் 1ஆம் தேதி அதாவது நாளை முதல் அமலுக்கு […]

Loading

செய்திகள்

கென்யா போன்ற நாடுகள் நடத்துவதுபோல் இந்தியாவும் சர்வதேச தடகள போட்டிகளை நடத்த வேண்டும்

நீரஜ் சோப்ரா வேண்டுகோள் டெல்லி, நவ. 30– கென்யா போன்ற நாடுகள் நடத்துவதுபோல், சர்வதேச தடகள போட்டிகளை இந்தியாவும் நடத்த வேண்டும் என ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘ஒலிம்பிக் 2024’ தொடர் நடைபெற […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

சென்னை, நவ.30– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது. இதன் மூலம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு […]

Loading

செய்திகள்

இந்தியாவில் 58 பேருக்கு கொரோனா; தமிழ்நாட்டில் மட்டும் 9 பேருக்கு பாதிப்பு

டெல்லி, நவ. 30– இந்தியாவில் புதிதாக 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 318 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 79 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,944 […]

Loading

செய்திகள்

சென்னையில் விமான சேவை பாதிப்பு; 30 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

சென்னை, நவ. 30– தலைநகர் சென்னையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தலைநகர் சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையின் நகர்ப் பகுதிகள் புறநகர்ப் பகுதிகள் என்று பரவலாக பல்வேறு பகுதிகளிலும் மழை அதிகமாகவே இருந்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டனர். தொடர் மழையால் சாலைகளில் நீர் தேங்கிய நிலையில், நேற்று […]

Loading

செய்திகள்

வாழப்பாடி அருகே வேன் மீது லாரி மோதி விபத்து: 3 பேர் பலி

வாழப்பாடி, நவ. 30– வாழப்பாடி அருகே புறவழிச்சாலையில், வேன் மீது பார்சல் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், வேனில் பயணித்த 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, சென்னையில் இருந்து சேலம் நோக்கி, சேலம்-சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே இன்று காலை 7 மணியளவில் ஒரு பிக்கப் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பார்சல் லாரி, வேன் மீது எதிர்பாரத […]

Loading

செய்திகள்

கடந்த 7 நாட்களில் 24 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை, நவ. 3– சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 24 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை பெருநகரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 01.01.2023 முதல் 29.11.2023 வரை […]

Loading

செய்திகள்

இடைக்கால போர் நிறுத்தம் தொடரும்: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

காசா, நவ.30– இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் தொடரும் என்று போர் நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இருதரப்பும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, “பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான மத்தியஸ்த நாடுகளின் தொடர் செயல்பாட்டு முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களின் படி போர் இடைநிறுத்தம் தொடர்கிறது” என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடைய தெளிவான விபரங்கள் எதுவும் குறிப்பிடாமல், ஏழாவது நாளைக்கு போர் நிறுத்தம் நீட்டிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று ஹமாஸ் தரப்பும் […]

Loading

செய்திகள்

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஐதராபாத்,நவ. 30– தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலுங்கானா மாநிலத்தின் 3-வது சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக 119 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இதில் இதுவரை 2 முறை முதல்வராக பதவி வகித்துள்ள சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.), பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதுதவிர, ஓவைசியின் […]

Loading

செய்திகள்

சென்னையில் கனமழைக்கு 2 பேர் உயிரிழப்பு

சென்னை, நவ. 30– சென்னையில் கனமழைக்கு 2 பேர் உயிரிழந்தனர். இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது. சென்னையை அடுத்த புதுப் பெருங்களத்தூர், திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது […]

Loading