செய்திகள்

பாஜகவால் எந்த பிரச்சினைக்கும் தீர்வை தர முடியாது; அதனால்தான் மதத்தை பற்றி மட்டும் பேசுகிறார்கள்

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு மும்பை, ஏப். 11– பாரதீய ஜனதாவால் எந்த பிரச்சினைக்கும் தீர்வை தர முடியாததால்தான், மதத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் வடக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில், ஆளும் மகா விகாஸ் அகாடியின் கூட்டணி சார்பில், காங்கிரஸைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஜாதவ் களமிறங்குகிறார். அவருக்கு ஆதரவாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேரடியாகப் பிரசாரம் செய்தார். வெறுப்பு பிரச்சாரம் ஏன்? […]

செய்திகள்

2 பெட்டிகளில் இருந்த 264 பவுன் தங்க நகை மாயம்: போலீசில் புகார்

சென்னை, ஏப். 11– உளுந்தூர்பேட்டை அருகே டெம்போ டிராவலரில் 2 பெட்டியில் எடுத்துச் செல்லப்பட்ட 264 பவுன் தங்க நகைகள் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் தெருவில் வசித்து வரும் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தனது சொந்த ஊரான புதூர் நாகலாபுரத்திற்கு டெம்போ ட்ராவலர் வேன் மூலம் நேற்றிரவு சென்றுள்ளனர். அப்போது வேனின் மேற்பகுதியில் தங்களது உடைமைகளை சூட்கேஸ்களில் […]

செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 5 நாட்களுக்கு மலர் கண்காட்சி

நீலகிரி, ஏப். 11– ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 ஆண்டுக்கு பிறகு அடுத்த மாதம், 5 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு […]

செய்திகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

திருச்சி, ஏப்.11- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் தெரிவித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்பு கல்லூரிகளில் தேர்வு கட்டணம் இளநிலை பாடங்களில் தலா ஒரு பாடத்திற்கு ரூ.75-ல் இருந்து ரூ.125 ஆகவும், முதுநிலை பாடங்களில் தலா ஒரு பாடத்திற்கு ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆகவும் உயர்த்தப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை கண்டித்து தொடர்ச்சியாக பல்வேறு […]

செய்திகள்

குஜராத் ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 பேர் பலி

புதுடெல்லி, ஏப்.11– குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 235 கி.மீ. தொலைவில் பருச் பகுதியில் செயல்பட்டு வரும் இயற்கை ரசாயனம் உற்பத்தி செய்யும் ஆலையில் இன்று அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அந்த ஆலையில் பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு […]

செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை, ஏப்.11- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்கிறது. நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- நேற்று புதிதாக 16 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 30 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 16 பேர் உள்பட 10 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 28 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை. மேலும் 12 வயதுக்கு […]

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 861 பேருக்கு கொரோனா

புதுடெல்லி,ஏப்.11– இந்தியாவில் இன்று புதிதாக 861 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் நேற்று முன்தினம் 1,150 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 1,054 ஆக சரிவு அடைந்தது. இன்று மேலும் குறைந்து புதிதாக 861 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இதுவரை 4 கோடியே 30 லட்சத்து 36 ஆயிரத்து 132 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேபோல், தொற்று […]

செய்திகள்

200 வார்டுகளுக்கு ரூ.70 கோடி மாமன்ற உறுப்பினர்‌ வார்டு நிதி ஒதுக்கீடு : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை, ஏப்.9– சென்னை பெருநகர மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கும் ரூ.70 கோடி மாமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் விவரம் வருமாறு:– பெருநகர சென்னை மாநகராட்சியில்‌ உள்ள அனைத்து சாலைகளும்‌, பொது மக்கள்‌ அனைவரும்‌ சிரமமின்றி தங்களது வாகனங்களில்‌ பயணிக்க ஏதுவாக சீரமைக்கப்பட்டு வருகிறது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்‌ கீழ்‌ 39.87 கி.மீ நீளமுடைய 59 சாலைகள்‌ ரூ.37.58 கோடி மதிப்பீட்டில்‌ மேம்படுத்தும்‌ […]

செய்திகள்

காட்டு யானை மிதித்து விவசாயி பலி

கிருஷ்ணகிரி, ஏப்.9– கிருஷ்ணகிரி மாவட்டம் கொங்கனப்பள்ளி, எப்ரி மகாராஜகடை வனப்பகுதிகளில் 12-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அந்த யானை, அங்கிருந்த விவசாய பயிர்களை நாசம் செய்து கொண்டிருந்தது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி திம்மப்பா நாயுடு (வயது 70) என்பவர் தனது […]

செய்திகள்

முதன் முறையாக தனியார் ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணித்த 4 பணக்காரர்கள்

வாஷிங்டன், ஏப்.9– சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரூ.1500 கோடி செலவு செய்து உலகின் பெரும் பணக்காரர்கள் சிலர் சென்றுள்ளனர். முதன்முறையாக முற்றிலுமாக தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டின் மூலம் இவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, இன்று காலை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 4 பேருடன் இந்த ராக்கெட் சீறிப்பாய்ந்தது. நாசாவுடன் இணைந்து ஆக்சியம், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய தனியார் விண்வெளி நிறுவனங்கள் இந்த விண்வெளிச் சுற்றுலாவை சாத்தியப்படுத்தியுள்ளது. இதற்காக, எலான் […]