செய்திகள்

சூரத் தொழிற்சாலையில் தீ விபத்து: 2 பேர் பலி; 125 பேர் உயிருடன் மீட்பு

சூரத், அக். 18– சூரத்தின் வரேலியில் உள்ள பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 125 பேர் மீட்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தில் கடோதராவின் வரேலியில் உள்ள விவா பேக்கேஜிங் தொழிற்சாலையின் ஐந்தாவது மாடியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணியில் இருந்தனர். தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தொழிலாளர்கள் அடுத்தடுத்த தளங்களுக்கு தப்பிச் சென்றனர்.இதனால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், […]

செய்திகள்

கத்தார் நாட்டு கடலில் மூழ்கி கும்பகோணத்தை சேர்ந்த தந்தை–மகன் பலி

கும்பகோணம், அக்.18- கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியானார்கள். அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டன. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கவிபாரதி நகரை சேர்ந்தவர் பாலகுரு. ஆசிரியர். இவருடைய மகன் பாலாஜி (வயது 38). இவர் கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி சுந்தரி, மகள் ரிஷிவந்திகா, மகன் ரக்சன் (10) ஆகியோருடன் கத்தார் நாட்டில் […]

செய்திகள்

2023ல் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டம் : இஸ்ரோ தகவல்

துபாய், அக்.18- இந்தியாவின் சார்பில் வருகிற 2023ம் ஆண்டு 4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்‌ரோ அறிவியல் செயலாளர் ஆர்.உமாமகேஷ்வரன் தெரிவித்தார். துபாயில் நடந்து வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் நேற்று விண்வெளி வார நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் பல்வேறு நாட்டு அரங்குகளில் அந்தந்த நாடுகளின் விண்வெளி தொழில்நுட்பங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்திய அரங்கிலும் விண்வெளி வார நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் நடைபெற்ற […]

செய்திகள்

தமிழகத்தில் நேற்று 1,218 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, அக்.18- தமிழகத்தில் 1,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 27 ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 714 ஆண்கள், 504 பெண்கள் என மொத்தம் 1,218 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேரும், கோவையில் 132 பேரும், […]

செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு

89 ஆயிரம் மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு துணை கலந்தாய்வு 20ந்தேதி தொடங்குகிறது சென்னை, அக்.18- என்ஜினீயரிங் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், மொத்தம் 89 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். துணை கலந்தாய்வு வருகிற 20ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரையில் […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. இணைய வேண்டும்: சசிகலா அழைப்பு

சென்னை, அக்.17– கழகத்திற்காகவும், தொண்டர்களுக்காகவும், மக்களுக்காகவும் நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது என்று சசிகலா கூறினார். அண்ணா தி.மு.க. பொன்விழாவையொட்டி சசிகலா நேற்றும் இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அங்கு மலர் தூவி கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். இதுநாள் வரை தன் மனதில் உள்ள பாரத்தை எல்லாம் நான் இன்று இறக்கி வைத்து விட்டேன் என்று பின்னர் […]

செய்திகள்

கேரளாவில் கன மழை: பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு; 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம், அக். 17– கேரளாவில் 2 நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவும் நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. அங்கு 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று அறிவித்து வானிலை மையம் 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவின் தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக […]

செய்திகள்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

துபாய், அக். 17– இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. 7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமிருந்ததாலும், 3-வது அலை வரலாம் என்ற […]

செய்திகள்

சென்னையில் வீடுகள் விற்பனை அதிகரிப்பு

சென்னை, அக். 17– சென்னையில் வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளதாக நைட் பிராங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வீட்டு வசதி திட்டங்கள் விற்பனை, புதிய திட்டங்கள் ஏற்படுத்துதல் போன்றவை குறித்து நைட் பிராங்க் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் குடியிருப்பு வீடுகள் விற்பனை 17% அதிகரித்துள்ளது. புதிய வீட்டு வசதி திட்டங்கள் துவக்கம் 49% வளர்ச்சி பெற்றுள்ளது. சென்னை நகரில் 3 மாதத்தில் (ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை) 3610 வீடுகள் வாங்க […]

செய்திகள்

சசிகலாவை மக்கள் ஏற்க மாட்டார்கள்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை, அக்.16– சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா சென்றது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-– சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள். இன்று சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு போய் இருப்பதையும் அது போன்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். லட்சக்கணக்கில் சென்றவர்களில் இவரும் ஒருவர் என்றுதான் சேர்த்துக் கொள்ளவேண்டும். அவர் எவ்வளவு […]