செய்திகள்

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

சென்னை,ஜன.28– டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாம் தொடர்பாக தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது. அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. […]

செய்திகள்

சமரச பேச்சுக்கு கவர்னர் அழைப்பு: மம்தா ஏற்க மறுப்பு

கொல்கத்தா, ஜன. 28– மேற்கு வங்க கவர்னர் சமரச பேச்சுக்கு அழைப்பு விடுத்தும் முதல்வர் மம்தா பானர்ஜி அதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில கவர்னராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றதிலிருந்தே பல விவகாரங்களில் கவர்னர் – முதல்வர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஒருவரையொருவர், பகிரங்கமாக விமரிசித்து வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த குடியரசு தின விழாவை தொடர்ந்து மாலையில், கவர்னர் மாளிகையில் நடந்த […]

செய்திகள்

பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் மாயம்: பொறுப்பாளர் போலீசில் புகார்

செங்கல்பட்டு,ஜன.28– பரனூர் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டபோது அங்குள்ள 12 பூத்துக்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி இருப்பதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சென்னை-–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு வட மாநிலத்தவர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். கடந்த 26 -ந் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பஸ் பரனூர் சுங்கச்சாவடியை வந்து அடைந்தது. அப்போது பஸ் […]

செய்திகள்

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

சென்னை, ஜன. 28– தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த முறையிலான கணக்கெடுப்பு, கடந்த 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி, 15-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. சுதந்திர இந்தியாவின் 8-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு இதுவாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பு […]

செய்திகள்

இலங்கையிலும் கொரோனோ வைரஸ்: சீனர்களுக்கு விசா ரத்து

கொழும்பு,ஜன.28– இலங்கையில் கொரோனோ வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து சீனப் பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்குவதை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை […]

செய்திகள்

10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம்

புதுடெல்லி, ஜன.28- திட்டமிட்டபடி, வருகிற 31-ந் தேதி மற்றும் பிப்ரவரி 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறினார். வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசிப்படி புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் செய்வது என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு […]

செய்திகள்

இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.28- குடியுரிமை திருத்த சட்டப்படி, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தங்களது மதத்துக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு, 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேற்கண்ட 3 நாடுகளில் […]

செய்திகள்

ஏர் இந்தியா 100 சதவீத பங்குகளும் விற்பனை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.28- பெரும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவின் பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ‘ஏர் இந்தியா’ பெரும் கடன் சுமையில் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான கடன் சுமையால் இந்த நிறுவனம் பயணிகளுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்குவதில் சிக்கல் உருவானது. இதேபோல், […]

செய்திகள்

நிப்பான் பெயிண்ட் நடத்திய ஆசிய இளம் வடிவமைப்பாளர், உள் அலங்கார நிபுணர் போட்டி; வெற்றி பெற்ற 20 பேர் சர்வதேச போட்டியில் பங்கேற்பு

சென்னை, ஜன. 27 ஆசியாவில் முன்னணி பெயிண்ட் தயாரிப்பாளரான நிப்பான் பெயிண்ட் சார்பில் ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு வெற்றியாளர்களை புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர்களான ஸ்வன்ஜால் காக் கபூர், ஷப்னம் குப்தா, யூஜின் பண்டாலா, அருண் கார்த்திக் மற்றும் சி.ஆர்.ராஜு ஆகிய நடுவர்கள் அறிவித்தனர். கட்டிடக்கலை வகையினத்தில் மும்பையைச் சேர்ந்த மிகிர் தேசாய் வெற்றி வெற்றார். உட்புற அலங்கார வடிவமைப்பு வகையினத்தில் ஆமதாபாத்தை சேர்ந்த பூர்வி டேங்க் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் இருவருக்கும் ரூ.50 ஆயிரம் […]

செய்திகள்

இந்தியன் வங்கியில் ரூ.247 கோடி லாபம்; 47 ஆயிரம் சிறு குறு தொழிலுக்கு ரூ.1800 கோடி கடன் உதவி

சென்னை, ஜன. 27 வங்கித் துறை தேக்க நிலையிலும் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியன் வங்கி ரூ.247 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது என்றும், 47 ஆயிரம் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1800 கோடி கடன் வழங்கியுள்ளது என்றும் வங்கியின் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இந்தியன் வங்கி கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிகர லாபமாக ரூ.247 கோடியை ஈட்டியுள்ளது. இது […]