செய்திகள் போஸ்டர் செய்தி

கோயம்பேடு மார்க்கெட் மூலம் 300 பேருக்கு ‘கொரோனா’

சென்னை, மே.4– சென்னை கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மூட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள், கூலி தொழிலாளளர்கள், வெளிமார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு கொரோனா பரவி வருகிறது. அவ்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது. தற்போது வரை கோயம்பேடு சந்தை மூலம் […]

செய்திகள் போஸ்டர் செய்தி

தேடித்தேடி சென்று பரிசோதனை செய்கிறோம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் டிஸ்சார்ஜ் * முகக்கவசம், கைகளை கழுவுவது அவசியம் * சென்னையில் 6 ஆயிரம் தள்ளுவண்டிகாரர்களையும் சோதனை நடத்த முடிவு தேடித்தேடி சென்று பரிசோதனை செய்கிறோம் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி   சென்னை, மே.4– சென்னையில் உள்ள 6 ஆயிரம் தள்ளுவண்டிகாரர்களிடமும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறினார். தேடித்தேடி சென்று பரிசோதனைகளை நடத்துகிறோம் என்று அவர் கூறினார். கொரோனா நோயாளிகளைக் களங்கப்படுத்தும் […]

செய்திகள்

20 வருடங்களாக நடந்த திருக்கல்யாண விருந்து இந்தாண்டு ஊரடங்கு நிவாரண உணவாக வழங்கல்!

20 வருடங்களாக நடந்த திருக்கல்யாண விருந்து இந்தாண்டு ஊரடங்கு நிவாரண உணவாக பழமுதிர்சோலை திருமுருகன் பக்தசபை வழங்கல்! மதுரை, மே.04– மதுரையில் மீனாட்சி திருக்கல்யாண தினத்தன்று நடைபெறும் திருக்கல்யாண விருந்து இந்தாண்டு ஏழைமக்களுக்கு ஊரடங்கு நிவாரண உணவாக பழமுதிர்சோலை முருகன் பக்தசபை சார்பில் வழங்கப்பட்டது. மதுரையில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி பள்ளியில் பழமுதிர்சோலை முருகன் பக்தசபை சார்பில் 2000 […]

செய்திகள் போஸ்டர் செய்தி

மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர்  திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர்  திருக்கல்யாணம் கோலாகலம் பக்தர்கள் இணையதளத்தில் பார்த்தனர் வீட்டிலேய மாங்கல்ய கயிறு கட்டிக் கொண்ட பெண்கள் மதுரை, மே 4– பக்தர்கள் இன்றி மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. 4 சிவாச்சாரியார்கள் நடத்திய திருமண சடங்குகளை பக்தர்கள் இணையதளத்தில் பார்த்தனர். மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவில் அர்ச்சகர்கள் மட்டும் […]

செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி   மதுரை,மே,04– அனைத்து நியாய விலைக்கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் விலையில்லா பொருட்களை சமூக இடைவெளி விட்டு வாங்கிச் செல்லும் பணி துவங்கி உள்ளது. ரேஷன் பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ கூறினார். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மதுரையில் உள்ள அனைத்து கல்லூரிகளை […]

செய்திகள்

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு கடலோர காவல் படையினர் நன்றி அறிவிப்பு

நடுக்கடலில் மின் விளக்குகள் மூலம் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு கடலோர காவல்படையினர் நன்றி அறிவிப்பு   தூத்துக்குடி, மே.4– கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மீது விமானபடை விமானங்கள் நேற்று மலர்கள் தூவப்பட்டன. அதே போன்று தூத்துக்குடியிலும் கடலோர காவல்படை சார்பில் நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் […]

செய்திகள்

மேலகரந்தை சோதனை சாவடியில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

தூத்துக்குடி, மே.4– தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் மேலகரந்தை சோதனைசாவடியில் மேற்கொள்ளபட்டு வரும் கண்காணிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தாவது:– வெளி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகை தரும் நபர்கள் உரிய அனுமதி பெற்று வருகிறார்களா என்பதையும் அனுமதி பெறாமல் ஏதேனும் நபர்கள் வருகை தருகிறார்களா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வருவாய்த்துறை அலுவலர்கள், […]

செய்திகள்

கொரோனா தடுப்புப் பணிக்காக: ராணுவ அலுவலா்கள் திருச்சி கலெக்டரை சந்தித்து பாராட்டு

திருச்சி, மே.4– கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக திருச்சி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையரை ராணுவ அலுவலா்கள் பாராட்டினா். கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புகாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புப் பணியில் வருவாய், சுகாதாரம், காவல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தோா் தொடா் பணியாற்றி வருகின்றனா். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவோரை பாராட்டும் வகையில் நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவ ஹெலிகாப்டா் மூலம் நேற்று மலா்தூவி பாராட்டு […]

செய்திகள்

குரங்குகளுக்கு உணவு வழங்கிய கூட்டுறவு சங்க தலைவர்

சோழவந்தான்,மே,04-– சோழவந்தான் அருகே நாகதீர்த்தம் மிகவும் சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். இங்கு பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கின்றன. இவற்றிற்கு தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் பழங்கள் மற்றும் உணவுகள் வழங்கி வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் கோவில் திறக்காததால் குரங்குகள் உணவுக்கு தவித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து தாராபட்டி கிராமத்தைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத் தலைவர் முத்து குரங்குகளுக்கு பழங்கள் சாப்பாடு […]

செய்திகள் போஸ்டர் செய்தி

இன்று முதல் பல்வேறு நிறுவனங்கள், தொழில்களுக்கு அனுமதி

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் முழு ஊரடங்கு இன்று முதல் பல்வேறு நிறுவனங்கள், தொழில்களுக்கு அனுமதி மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு   * கட்டுமான, சாலை பணிகள் நடத்தலாம் * அத்தியாவசிய பொருட்கள் உட்பட குறிப்பிட்ட கடைகள் மாலை 5 மணி வரை திறக்கலாம் சிறுதொழில், கிராமத் தொழில்களுக்கு அனுமதி தேவை இல்லை   சென்னை, மே.4– தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள […]