செய்திகள்

எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘கிருஷ்ண பரமாத்மா’ கதை

சென்னை, நவ.15– அம்மாவின் ஆசியும் அருளும் இருந்தால் மக்கள் சக்தி தானாக வந்து சேரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அப்போது ‘கிருஷ்ண பரமாத்மா’ கதையையும் சொன்னார். ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி துவக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:– மகாபாரத யுத்தம் நிச்சயமாயிற்று. தங்களது படைக்கு வலு சேர்க்க தர்மரும், துரியோதனனும் பக்கத்திலுள்ள அரசர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வந்தனர். ஆனால் இருவரும் கிருஷ்ண பரமாத்மா தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று […]

செய்திகள்

உண்மை செய்திகளை வெளியிட்டு அனைத்து மக்களின் ஆதரவை பெற வேண்டும்

சென்னை, நவ.15– உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும். பரபரப்புக்காக உண்மைக்கு மாறான செய்திகளை பிறர் பாதிக்கிற வகையில் வெளியிடக்கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அண்ணா தி.மு.க.வின் அதிகாரபூர்வ டி.வி.யாக ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி துவக்க விழா நேற்று மாலை சென்னை எழும்பூர் நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த தொலைக்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்கள். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:– மனிதன் தனது உணர்வுகளை கருத்துக்கள் […]

செய்திகள்

தேசிய பத்திரிகை தினம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை, நவ.15– தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைத்து, அவர்தம் அறிவுக்கண்ணை திறக்கும் உயரிய பணியை ஆற்றுவதால் பத்திரிகை துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பத்திரிகை மற்றும் ஊடகத் துறையின் பணியினை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16ம் நாள் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த […]

செய்திகள்

ஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்

ஆக்ரா,நவ.15– உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மொகல்லா கச்சேரா பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குரங்கு கடித்து கொன்றது. தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று கொன்றது. இந்த நிலையில் ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவில் உள்ள காகிரனுல் […]

செய்திகள்

சென்னையில் மிதமான மழை பரவலாக பெய்யும்

சென்னை,நவ.15– கஜா புயல் கரையை கடப்பதால் இன்று காலை சுமார் 11 மணியில் இருந்து சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மிதமான மழை பரவலாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகே 370 கி.மீ., நாகைக்கு அருகே 370 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் […]

செய்திகள்

நீர் மேலாண்மை, நீர் ஆதாரப் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களின் 5 நாள் ஓவியக் கண்காட்சி

சென்னை, நவ. 15– நீர் மேலாண்மை குறித்தும் நீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்தும் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்களில், பரிசு பெற்ற படங்களின் கண்காட்சியை தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார். கோடம்பாக்கம் சப்னம் ரிசோர்சஸ் அறக்கட்டளை சார்பில், விமலா கான்வென்ட் பள்ளி மற்றும் துர்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே, ‘நீர் ஆதாரங்களை காப்போம்’ என்ற தலைப்பில் கடந்த மாதம் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அதில் பல்வேறு சிறந்த ஓவியங்களை, ரஷ்ய கலாச்சார மையத்தின் இயக்குநர் கென்னடி ஏ. ராகலேவ் […]

செய்திகள்

கஜா புயல் எதிரொலி: ராமேசுவரம் ரெயில்கள் ரத்து

சென்னை, நவ.15- கஜா புயல் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) ராமேசுவரத்தில் இருந்து மதுரை மற்றும் திருச்சிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும் சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ்(போட் மெயில்) மற்றும் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரசும் இன்று ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் ராமேசுவரத்தில் இருந்து திருப்பதிக்கு இன்று புறப்படும் […]

செய்திகள்

‘நெல்’ ஜெயராமனுக்கு எடப்பாடி பழனிசாமி ரூ.5 லட்சம் நிதிஉதவி

சென்னை, நவ.15– புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் ‘‘நமது நெல்லை காப்போம்” என்ற இயக்கத்தின் மூலம் பாரம்பரிய விவசாயத்தினை போற்றிப் பாதுகாத்து இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்து, அனைத்து விவசாயிகளும் பயன் பெறவேண்டும் என்ற உயர்ந்த […]

செய்திகள்

கஜா புயல் வேகம் மணிக்கு 23 கி.மீட்டராக உயர்வு

சென்னை:- கஜா புயல் நகர்ந்து வரும் வேகம் மணிக்கு 23 கி.மீட்டராக உயர்ந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று நிலப்பகுதியை நோக்கி வருகிறது. இந்த புயலானது பாம்பன் கடலூர்  நாகை இடையே இன்று மாலை அல்லது இரவு கரையைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கஜா புயல் மணிக்கு 23 கி. மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நாகைக்கு அருகே […]

செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வாரு ஆண்டும் அமெரிக்க அதிபர் மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. இதில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி முக்கியஸ்தர்கள் பங்கேற்பேர். இந்தாண்டும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிபர் டிரம்ப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி உரையாற்றினார். “இந்தியர்கள் கடினமான உழைப்பாளிகள், இந்தியாவை சேர்ந்த பல லட்சம் கடின உழைப்பாளிகளுக்கு தாயகம் அமெரிக்கா” என்றார். தொடர்ந்து டுவிட்டரில் டிரம்ப் கூறியது, “தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக […]