செய்திகள்

சாய் இன்ஸ்டிடியூஷன் கல்வி நிறுவனத்தில் 105 மாணவர்களுக்கு பட்டம்

சென்னை, ஜூலை 21– சென்னை சைதாப்பேட்டையில் இயங்கிவரும் சாய் இன்ஸ்டிடியூஷன் கல்வித்துறையில் 14 வருட அனுபவம் வாய்ந்தது. இக்கல்வி நிறுவனத்தில் ஓட்டல் மேனேஜ்மெண்ட், விஸ்காம், பேஷன் டெக்னாலஜி, ஏர்லைன்ஸ் போன்ற துறைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் சொகுசு கப்பல்களில் பணிபுரிகின்றனர். இந்நிறுவனத்தின் கடந்த கல்வியாண்டில் தேர்வு பெற்ற 105 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் […]

செய்திகள்

விஐடி மாணவர்கள் 21 பேருக்கு ஜி.டி.நாயுடு இளம் விஞ்ஞானி விருது

வேலூர், ஜூலை 21– இயந்திரவியல் பொறியியல் ஆராய்ச்சியில் சாதனை புரிந்த விஐடி மாணவர்கள் 21 பேருக்கு ஜி.டி. நாயுடு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையத்தின் ( IISc Indian Institute of Science, Bengaluru) மூலப்பொருட்கள் பொறியியல் துறை பேராசிரியர் பத்மஸ்ரீ திபாங்கர் பானர்ஜி இந்த விருதுகளை வழங்கினார். விஐடியின் இயந்திரவியல் மற்றும் ரசாயன பொறியியல் பள்ளி சார்பில் ஆராய்ச்சிக்கான விரைவுதடம் முனைப்பு பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் விஐடியில் […]

செய்திகள்

பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது எப்படி?

புதுடெல்லி,ஜூலை.21– பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

செய்திகள்

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம், ஜூலை 21–- தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அறிவுரையின் பேரில், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் படப்பையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். காஞ்சீபுரம் மேற்கு மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது என்றும்,கழக அரசின் சாதனைகளை பரப்புவது என்றும் கூட்டத்தில் […]

செய்திகள்

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

சென்னை, ஜூலை 21– உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் விழா பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு, நேரு உள்விளையாட்டரங்கில் இருந்து ரிப்பன் மாளிகை வரை நடைபெற்ற சென்னை மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். உலக மக்கள் தொகை 1987–ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் […]

செய்திகள்

கடலூர் மாவட்ட நீர்நிலைகளில் தூர்வாரப்பட்டுள்ள பணிகள்

கடலூர், ஜூலை 21– கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் நீர்நிலைகளில் தூர்வாரப்பட்டுள்ள பணிகளை கலெக்டர் தண்டபாணி முன்னிலையில் பேரூராட்சி துறை இயக்குநர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் பூவாணிக்குப்பம் பகுதியில் உள்ள பெருமாள் ஏரியினை பேரூராட்சி துறை இயக்குநர் சு.பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் பெருமாள் ஏரியில் உள்ள ஆண்டார்முள்ளிபள்ளம் மதகினை பார்வையிட்டு, பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்படும் வாய்க்காலினை […]

செய்திகள்

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா

திருவண்ணாமலை, ஜூலை 21– ஆடி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் நடைபெற்ற புஷ்ப பல்லக்கு வீதி உலாவை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் 45ம் ஆண்டு பிரமாண்டமான ஆடி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட […]

செய்திகள்

உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டரிடம் ‘செட்டாப் பாக்சை’ ஒப்படைக்க வேண்டும்

சென்னை, ஜூலை 21– கேபிள் டிவி நிறுவனத்தில் கேபிள் இணைப்பு பெறுபவர்கள் வேறு இடத்துக்கு செல்லும்போது ‘செட்டாப் பாக்சை’ உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டரிடம் திருப்பி செலுத்த வேண்டும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை […]

செய்திகள்

காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனை நிலைய அதிகாரிக்கு விருது

காஞ்சீபுரம், ஜூலை 21–- இந்திய மருத்துவ சங்கத்தின் காஞ்சீபுரம் கிளையின் மருத்துவ தின விழா ஒரு ஓட்டலில் நடந்தது. இந்த விழாவுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக மாநில தலைவர் டாக்டர் ஜெயலால் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், இளம் மருத்துவர் சாதனையாளர் விருதை காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரியும், பெண் டாக்டருமான கல்பனா சங்கரனுக்கு டாக்டர் ஜெயலால் வழங்கி கௌரவித்தார். இதுவரை டாக்டர் கல்பனா சங்கரன் 6 ஆயிரம் கண்புரை நீக்குதல் அறுவை […]

செய்திகள்

சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் வழங்குதல் சிறப்பு முகாம்

காஞ்சீபுரம், ஜூலை 21-– சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் வழங்குதல் தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் துறை அதிகாரி அ.நூர்முகம்மது தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு பல்வேறு கடன் உதவித் திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பான சிறப்பு முகாம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் […]