செய்திகள்

தமிழகத்தில் சீரான முறையில் குடிநீர் வினியோகம்: சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை, ஜன. 7 தமிழகத்தில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது விருத்தாசலம் தொகுதி உறுப்பினர் கலைச்செல்வன் கேள்வி ஒன்றை எழுப்பினார். விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் கீழ்காலனி பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்றார். அதற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கையில், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் […]

செய்திகள்

அமெரிக்கா – ஈரான் மோதல்: இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி

புதுடெல்லி, ஜன. 7 அமெரிக்கா – ஈரான் மோதல் காரணமாக இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி- அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. ஈரான் நாட்டு ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது ஆள்இல்லாத சிறிய விமானம் மூலம் ஏவுகணைகளை வீசியதில் அவர் உயிரிழந்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான், ஈராக் மற்றும் பல்வேறு நாடுகள் கடும் […]

செய்திகள்

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனுக்கு சட்டசபையில் இரங்கல்

சென்னை, ஜன.7– முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவு குறித்து சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்து சபாநாயகர் தனபால் பேசியதாவது:– தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் 1977–80, 1980–84, 1985–88, 1989–91 ஆகிய ஆண்டுகளில் 4 முறை சேரன்மாதேவி தொகுதியிலிருந்து தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக சட்டசபையின் துணைத் தலைவராகவும், சட்டசபை தலைவராகவும் பணியாற்றியவர். அதேபோல் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார். அவர் 4.1.2020 அன்று மறைந்த […]

செய்திகள்

குடியுரிமை சட்டம் குறித்து பேச ஸ்டாலினுக்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு

சென்னை, ஜன. 7– சட்டசபையில் இன்று குடியுரிமை சட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விரி்வாக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பின்னர் பூஜ்ய நேரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். குடியுரிமை சட்டம் குறித்து இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேரவை தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். அது தொடர்பாக அவையின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் என்றார். […]

செய்திகள்

வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை, ஜன. 7– வருமானத்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் எம்.பி., அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம் 21–ந் தேதி நடைபெறும் விசாரணையில் 2 பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு […]

செய்திகள்

எல்லையில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதி சுட்டு கொலை

ஜம்மு, ஜன. 7 எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை நோக்கி இந்திய வீரர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவமும் போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி நமது ராணுவத்தின் மீதும் எல்லையோர கிராம மக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்து […]

செய்திகள்

52 இடங்களை தாக்குவோம் என்ற அமெரிக்கா மிரட்டலுக்கு ஈரான் அதிபர் பதில்

சென்னை, ஜன. 7– ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்தி, 66 குழந்தைகள் உள்ளிட்ட 290 பேரை கொன்றதையும் கூட நாங்கள் மறக்கவில்லை என, 52 இடங்களை தாக்குவோம் என்ற அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் அதிபர் பதிலளித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் […]

செய்திகள்

புகழேந்தி அண்ணா தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார்

சென்னை, ஜன. 7– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் புகழேந்தி அண்ணா தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார். அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தலைமைக் கழகத்தில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வா. புகழேந்தி நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். மேலும், வா. புகழேந்தி தலைமையில், […]

செய்திகள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவி மீது போலீசார் வழக்குப் பதிவு

புதுடெல்லி, ஜன. 7 டெல்லியில் உள்ள ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5-ந்தேதி முகமூடி அணிந்த கும்பல் தடியுடன் வந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவி ஆஷிஜோஸ் உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என இடதுசாரிகளும், அகில பாரதிய வித்யார்த்த பரி‌ஷத் அமைப்பினரும் மாறிமாறி குற்றம்சாட்டினர். இந்த நிலையில் மர்ம கும்பல் தாக்குதலில் தலையில் காயம் […]

செய்திகள்

ஆஸ்திரேலியாவின் ‘க்வண்டாஸ்’: உலகிலேயே பாதுகாப்பான விமானம்

சென்னை, ஜன.7– 2020 ஆம் ஆண்டின் மிக பாதுகாப்பான விமானங்கள் பட்டியலை, ஏர்லைன்ஸ் ரேட்டிங் எனப்படும் விமானப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மறு ஆய்வு வலைதளம் வெளியிட்டுள்ளது. விமானங்களைப் பற்றி கைதேர்ந்த வல்லுநர்களால் இயக்கப்படும் இந்த வலைதளத்தில், பாதுகாப்பான முதல் 20 விமான நிறுவனங்களின் பட்டியல் வெளி வந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘க்வண்டாஸ்’ விமான நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. பாதுகாப்பான விமான நிறுவனங்கள் பட்டியலில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை […]