செய்திகள்

ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம், பூங்கா: அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை, நவ.11– மதுரை மாநகராட்சி பகுதிகளில் 1 கோடியே 53 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அம்ரூட் பூங்காக்களை மாவட்ட கலெக்டர் எஸ்.நடராஜன், தலைமையில் மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ திறந்து வைத்து பார்வையிட்டார். மதுரை விராட்டிபத்தில் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் 3480 சதுரடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஹெச்.எம்.எஸ். காலனியில் அம்ரூட் திட்டத்தின் […]

செய்திகள்

பெற்றோர்கள் சேர்ந்து விளையாடி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: இந்திய கபடி பயிற்சியாளர் பாஸ்கரன் பேச்சு

வத்தலக்குண்டு, நவ.11– திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப்பள்ளியின் 5ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளயின் நிறுவனர் தங்கமுத்து தலைமை வகித்தார். பள்ளிசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கயல்விழி முன்னிலை வகித்தனர். மழலையர் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் சுகன்யா, சுஜிதா ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக திருச்சி சமத்பள்ளியின் முதல்வர் சாக்கோ வாழத்தி பேசினார். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றி பேசிய இந்திய கபடிகுழுவின் […]

செய்திகள்

புதுக்கோட்டை குளத்தூரில் பயிர் சுழற்சி செயல் விளக்க பயிற்சி: வேளாண்மை இயக்குனர் தெட்சிணாமூர்த்தி ஆய்வு

புதுக்கோட்டை, நவ.11– புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் வட்டாரம் குளத்தூர் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பயிர் சுழற்சி செயல் விளக்கத்தினை வேளாண்மை இயக்குநர் தெட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார்கள். குளத்தூர் கிராமத்தில் 50 எக்டரில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் பயிர் சுழற்சி செயல்விளக்கம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 49 விவசாயிகளுக்கு முதல் பயிராக ADT 49 நெல் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.75 ஆயிரத்திற்கான இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு […]

செய்திகள்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணிகள்

சோழவந்தான், நவ.11– சோழவந்தான் பேரூராட்சி மற்றும் கச்சைகட்டி, மேலக்கால் வட்டார மருத்துவமனைகள் இணைந்து பொதுமக்களுக்கு டெங்கு, பன்றிகாய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சோழவந்தான் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து சோழவந்தான் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், வங்கி ஏ.டி.எம் மையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை வளாகம், பேரூராட்சி சந்தை உள்ளிட்ட இடங்களில் பன்றி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க லைசால் கிருமிநாசினி தெளித்தும் கைகழுவும் முறை பற்றியும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. […]

செய்திகள்

அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டும்: பாஜக எம்.பி. வலியுறுத்தல்

  லக்னோ, நவ. 11– ராமர் கோயில் கட்டுவது குறித்து இந்துத்துவ கட்சிகள் குரலெழுப்பி வரும் நிலையில், அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டுமென, பாஜக எம்.பி.சாவித்திரிபாய் பூலே கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி – ராமர் கோயில் தொடர்பான பிரச்சினைக்குரிய நிலம் குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அயோத்திக்கும் புத்தருக்குமான தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டார் பஹ்ரைச் […]

செய்திகள்

ஜனார்த்தன ரெட்டியின் உதவியாளர் திடீர் கைது

    பெங்களூரு,நவ.10– விசாரணைக்கு ஆஜராக வந்த ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகானை குற்றப் பிரிவு போலீசார் திடீரென கைது செய்தார்கள். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, நிதி நிறுவன அதிபரிடம், 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கியது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகான் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த நிலையில், தங்க கட்டிகள் பெற்ற வழக்கில் ஜனார்த்தனரெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதுபோல, விசாரணைக்கு ஆஜராகும்படி அலிகானுக்கும் போலீசார் […]

செய்திகள்

வேலூர் தண்டலம் ஊராட்சியில் ரூ.6 கோடியில் நலத்திட்ட உதவிகள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி வழங்கினார்

  வேலூர், நவ.11– வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் காவோிபாக்கம் ஊராட்சி ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்ட சிறப்பு மனு நீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 391 பயனாளிகளுக்கு ரூ.5.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ராமன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராமன் பேசியதாவது:– கடந்த 2016–ம் ஆண்டு முதல் தற்போது வரை […]

செய்திகள்

கடலூரில் மாநில அளவிலான தடகள போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், பரிசு அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர், நவ.11– கடலூர் மாவட்டம் நெய்வேலி பாரதி விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற 61–வது மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையினையும், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:– மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகளில் வெற்றிப்பெற்று முதலிடம் பெற்றவருக்கு பரிசு தொகை ரூ.1,200-ம், இரண்டாமிடம் பெற்றவருக்கு பரிசு தொகை ரூ.800-ம், […]

செய்திகள்

விழுப்புரம் பேரங்கியூர், மேட்டத்தூர் பகுதிகளில் கலெக்டர் தலைமையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி

  விழுப்புரம்,நவ.11- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் பேரங்கியூர் மற்றும் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் மேட்டத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில், டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டரின் நேரடிப் பார்வையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்று […]

செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளிய ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம்

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் குற்றச்சாட்டு   டெல்லி, நவ. 11– பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவைச் சந்தித்ததாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியதாகவும், தற்போதைய ஏழு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியால் நாட்டின் தேவைகளைச் சந்திக்க முடியாது எனவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரபல பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியாகி இரண்டு […]