செய்திகள்

மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக்கல்லூரி 60-ம் ஆண்டு தொடக்க விழா: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்பு

காஞ்சீபுரம், பிப்.29-– மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக்கல்லூரியில் 60-ம் ஆண்டு தொடக்க விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக அரசின் கலை, பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் அரசினர் சிற்பக்கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மரபு கட்டிடக்கலை, கற்சிற்பம், மரச்சிற்பம், உலோக சிற்பம், வண்ண ஓவியம் ஆகிய படிப்புகள் நான்கு ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரி தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு 60-ம் ஆண்டு […]

செய்திகள்

அரியலூர் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு சமூக நல விருது

சென்னை, பிப். 28– இ.டி. நவ் நடத்திய வேர்ல்ட் சிஎஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் அரியலூர் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு ‘முழுமையான சமுதாய மேம்பாடு’ விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– விருதுக்கு 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 70 தன்னார்வ அமைப்புகள் போட்டியிட்டன. அவற்றில் 30 நிறுவனங்கள், 20 தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு ‘முழுமையான சமுதாய மேம்பாடு’ விருது கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் கனடா […]

செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக 16-வது பட்டமளிப்பு விழா: 4075 மாணவ, மாணவியருக்கு பட்டம்

சென்னை, பிப்.28– அண்ணா பல்கலைக்கழக 16-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கே.சுரப்பா தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நேற்று நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எல்.கருணாமூர்த்தி வரவேற்றார். இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் கவுன்சில் டைரக்டர் ஜெனரல் சேகர் சி.மண்டே 4,075 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் மிகக் குறைந்த காலத்தில் நாட்டிலேயே மிகச்சிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் […]

செய்திகள்

நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: சூளேரிக்காட்டுக்குப்பத்திற்கு அடிப்படை வசதிகள்

சென்னை, பிப்.28– நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான சூளேரிக்காட்டுக்குப்பம் கிராம மக்களுடனான வாழ்வாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னைக் குடிநீர் வாரிய செயல் இயக்குநர் டாக்டர் த.பிரபு சங்கர், கூட்டத்தில் பங்கேற்று, கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்து அளிக்கப்பட்ட பல்வேறு மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள், கடல்நீரை குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தகாரர்கள் உள்பட […]

செய்திகள்

மீன்வளர்ப்பு தொழில்முனைவோர் முகமை பயிற்சி

சிதம்பரம், பிப்.28– அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டதாரி மாணவர்களுக்கான 28 நாள் மீன் வளர்ப்பு தொழில் முனைவோர் முகமை பயிற்சி வகுப்பு இன்று தொடங்கப்பட்டது. ஐதராபாத் தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியம் மற்றும் தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனம் ஐதராபாத் நிதி உதவியுடன் நடைபெறும் இதில் நாடு முழுவதிலும் இருந்து 30 மாணவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் துவக்கி வைத்து திறன் வளர்த்து கொள்வதின் அவசியம் குறித்து உரையாற்றினார். கடல் அறிவியல் […]

செய்திகள்

பெரும்பாக்கத்தில் தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.7 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம்: அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒப்படைப்பு

பெரும்பாக்கம், பிப். 28– பெரும்பாக்கத்தில் தனியார் நிறுவனங்களால் ரூ.7 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் 1.2 ஏக்கர் நிலத்தில் ரூ.6.94 கோடியில் 29 ஆயிரம் சதுர அடியில் 2 தளங்களில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் 14 நவீன வகுப்பறைகள், 7 ஆய்வகங்கள், ஆசிரியர்கள் அறை, பார்வையாளர் அறை, தலைமை ஆசிரியர் அறை, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே கழிவறை உள்ளிட்டவை […]

செய்திகள்

சென்னையில் 33400 கால்நடைகளுக்கு இன்று முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணிகள்

சென்னை, பிப்.28– சென்னை மாவட்டத்தில் உள்ள 33 ஆயிரத்து 387 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி இன்று (28–ந் தேதி) முதல் 19.3.2020 முடிய 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது என கலெக்டர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மேலும் கூறியதாவது:– கால்நடைகளில் ஏற்படும் தொற்றுநோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும் […]

செய்திகள்

மார்ச் 11–ந்தேி முதல் வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம்

திருச்சி, பிப். 28– ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தமிழ்நாடு–புதுச் சேரி மாநில பொதுச் செயலாளர் ஜி.கிருபாகரன் தலைமையில் திருச்சியில் நேற்று காங்கிரஸ் எம்பி சு.திருநாவுக்கரசரைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் கிருபாகரன் கூறியதாவது:– ஊதிய […]

செய்திகள்

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டு களிக்க குவிந்த மாணவர்கள்

காஞ்சீபுரம், பிப். 28- மாமல்லபுரத்தில் ஒரே நாளில் புதுச்சேரியை சேர்ந்த 1000 பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். புராதன சின்னங்களை வரிசையில் சென்று கண்டுகளித்தனர். ஒழுக்கத்தை கடைபிடித்த மாணவர்களை வெளிநாட்டினர் வெகுவாக பாராட்டினர். மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் வந்து சென்ற பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில், தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கு […]

செய்திகள்

காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சீபுரம், பிப். 28- உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலின் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலின் மாசி மகத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் 28ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அதிர்வேட்டுகள், மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனை காட்டினர். திரண்டு இருந்த பக்தர்கள் ‘‘காமாட்சியம்மன் தாயே… அம்மா… காமாட்சியம்மா…’’ என்று பக்திகரகோஷம் எழுப்பினர். பிறகு காமாட்சி அம்பாள் மலர் […]