செய்திகள்

நாட்டின் எல்லை பகுதிகள் மிக பாதுகாப்பாக உள்ளன

புதுடெல்லி,ஜன.11– நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளதாகவும், இதில் அச்சமடைவதற்கு எந்த தேவையும் இல்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:–- நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லை நெடுகிலும் நாங்கள் அமைதியை பராமரித்து வருகிறோம். நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன. இதில் […]

செய்திகள்

டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்

வாஷிங்டன்,ஜன.1– அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பதால் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதை டிரம்ப் தவிர்த்துள்ளார். அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் […]

செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 3–ந்தேதி 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை, ஜன.11– தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் 70 லட்சம் குழந்தைகளுக்கு பிப்ரவரி 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியது:– தமிழக சுகாதாரத் துறையின் தொடர் நடவடிக்கையால் கடந்த 15 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த ஆண்டு குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 3ம் தேதி நடைபெற […]

செய்திகள்

திருச்சி மாநகர போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்த திட்டம்

திருச்சி, ஜன.10 திருச்சி மாநகர பஸ் நிறுத்த நிழற்குடைகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவதுடன், பணியின்போது போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றின் சி.சி.டி.வி.கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ள 2,500 சி.சி.டி.வி. கேமராக்களை […]

செய்திகள்

123-வது மலர் காட்சியையொட்டி ஊட்டியில் மலர் நாற்றுகள் நடும் பணி

நீலகிரி, ஜன. 10– நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் 123-வது மலர்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி (அ) ராமு முன்னிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:– 2019 மே மாதம் நடைபெறவிருக்கும் 123-வது மலர்காட்சியை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பாத்திகளில் வண்ண மலர்ச்செடிகளை கொண்டு மலர் பாத்திகளை அமைக்க விரிவான […]

செய்திகள்

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் தேர்த்திருவிழா

ஈரோடு, ஜன. 10– பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள புகழ்மிக்க பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் தீக்குண்டம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல், இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. குண்டம் தேர்த்திருவிழாவையொட்டி பாரியூர் கொண்டத்து காளியம்மன் தினசரி சிறப்பு அலங்காரத்தில் மக்களுக்கு அருள்பாலித்தார். பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு […]

செய்திகள்

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு; முதல்வர், துணை முதல்வருக்கு மக்கள் பாராட்டு

காஞ்சீபுரம்,ஜன.10- இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட 1.98 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர் என்று சிட்லபாக்கத்தில் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ச.ராசேந்திரன் பேசினார். பொங்கல் பண்டிகையையொட்டி, சிட்லபாக்கத்தில் அமைந்துள்ள அரசு நியாய விலைக்கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ.1000 மற்றும் அரிசி, சர்க்கரை, முந்திரி, […]

செய்திகள்

தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் குரு சங்கமம் விழா

சென்னை, ஜன. 9 – சென்னையை அடுத்த மணிமங்கலம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களை கௌரவித்து, பெருமை சேர்க்கும் வகையில் குரு சங்கமம் நிகழ்ச்சி கல்லூரியின் நிறுவனத் தலைவர் வி.பி. ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தனலட்சுமி பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுயம்பழகன், விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். சீயோன் – ஆல்வின் கல்வி குழுமங்களின் தலைவர் என். விஜயன் பங்கேற்றார். பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே. வாசுதேன் காஞ்சிபுரம் […]

செய்திகள்

இருதய துடிப்பு குறைந்த நோயாளிக்கு நவீன கருவியை பொருத்தி பிழைக்க வைத்த காவேரி மருத்துவமனை டாக்டர் ஏ.கே.கோபாலமுருகன்

சென்னை, ஜன. 9– இருதயத் துடிப்பு குறையும் போது கண்டறிந்து தானாக செயல்பட்டு துடிப்பை தூண்டும் சாதனத்தை காவேரி மருத்துவமனையில் இருதய துடிப்பு குறைந்த நோயாளிக்கு டிஃபிப்ரிலேட்டரை என்ற கருவியை பொருத்தி உயிர் பிழைக்க வைத்தார் டாக்டர் ஏ.கே.கோபாலமுருகன். காவேரி மருத்துவமனையின் மூத்த இருதய நோய் சிகிச்சை நிபுணரும், எலக்ட்ரோ பிசியாலஜி நிபுணர் டாக்டர் ஏ.கே.கோபாலமுருகன். திடீர் இருதய முடக்க மரணம் தவிர்ப்புத் திட்டத்தின் (SCDPP) இருதய நோய் சிகிச்சை வல்லுநர் குழு இவர் தலைமையில் செயல்பட்டு […]

செய்திகள்

நடைபாதையில் தூங்கிய கார் டிரைவர் ; ஜேசிபி எந்திரம் ஏறி சாவு

சென்னை,ஜன.10 – காரை சாலை ஓரம் நிறுத்தி விட்டு நடைபாதையில் தூங்கிய கார் டிரைவர் ஜேசிபி எந்திரம் ஏறி உடல் நசுங்கி இறந்தார் . ஜேசிபி எந்திர ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். இறந்தவர் பெயர் குப்புராஜ் வயது 40. இவர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். ஜேசிபி எந்திர ஓட்டுனர் அர்பக்சாவை போலீசார் கைது செய்தனர்.  இவர் சார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். இவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.