செய்திகள்

தென்மேற்கு பருவமழை 8 -ந் தேதி கேரளாவில் துவங்குகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவனந்தபுரம்,ஜூன்.5– கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 8 -ந் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்றும் ஜூன் 6-ந்தேதி மழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருகிற 8-ந்தேதி தென்மேற்கு பருவமழை […]

செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரம்ஜான் வாழ்த்து

புதுடெல்லி,ஜூன்.5– ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தொண்டு, இரக்கம், சகோதரத்துவத்தை வளர்க்கும் பண்டிகை ரம்ஜான் என குறிப்பிட்டுள்ளார்.ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தான – தர்மங்களின் மூலம் ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு சேர்க்கின்றனர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தொண்டு, இரக்கம், சகோதரத்துவத்தை வளர்க்கும் பண்டிகை ரம்ஜான் என குறிப்பிட்டுள்ளார். ஈதுல் பித்ர் என்னும் இந்த சிறப்புக்குரிய […]

செய்திகள்

டிக்டாக் செயலி போட்டி: உலக கிரிக்கெட் பார்க்க 5 பேருக்கு இலவச வாய்ப்பு

சென்னை, ஜூன் 5– ‘‘டிக்டாக்’’ செயலி போட்டியில் வெற்றி பெறும் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, இங்கிலாந்து நாட்டில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை காண வாய்ப்பு வழங்குகிறது, டிக்டாக்! ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ சமூக வலைதளமாக இயங்க ஒப்பந்தமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, டிக்டாக் செயலியைப் பயன்படுத்தி கிரிக்கெட் ஆர்வலர்கள் சவாலில் வெற்றி பெறலாம். அவ்வாறு வெற்றி பெற்றவர்களில் இருந்து 5 பேரைத் தேர்ந்தெடுத்து இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பி, இந்திய அணி விளையாடும் போட்டிகளை […]

செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட்: நுவான் பிரதீப், மலிங்கா அபார பந்துவீச்சு: ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இலங்கை அணி

கார்டிப், ஜூன் 5– உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. கார்டிப்பில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும், கேப்டன் கருணாரத்னேவும் ஆடினர். நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த இந்த […]

செய்திகள்

கொடைக்கானலில் நாய் கண்காட்சி

கொடைக்கானல்,ஜூன்.4 கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவையொட்டி பிரையண்ட் பூங்காவில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா கடந்த 30 ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கோடை விழாவையொட்டி படகு போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கோடைவிழாவையொட்டி பிரையண்ட் பூங்காவில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த நாய்கள் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, புதுவை, போன்ற மாநிலங்களில் இருந்தும் 100 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. […]

செய்திகள்

குஜராத் நவ்சாரியில் எல் அண்டு டி சேர்மன் ஏ.எம். நாயக் நிறுவும் மருத்துவமனை: அப்பல்லோ மருத்துவமனை நிர்வகிக்கும்

சென்னை, ஜூன் 4– நிராலி நினைவு மருத்துவ அறக்கட்டளை என்ற அமைப்பை எல் அண்டு டி நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். நாயக் நிறுவியுள்ளார். இந்த அறக்கட்டளையின் மூலம் குஜராத்தின் நவ்சாரி நகரில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். இந்த பன்னோக்கு மருத்துவமனை அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தால் செயல்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படும். இது தொடர்பான ஒப்பந்தம் டாக்டர் ஏ.எம். நாயக் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டிக்குமிடையே கையெழுத்தானது. நாயக்-கின் பேத்தியான நிராலி புற்று நோய் காரணமாக 2 […]

செய்திகள்

54 வருட கலைச்சேவை: மூத்த நடிகர் ராம்கிக்கு ‘நாடக முத்ரா’ விருது: நடிகை சச்சு வழங்குகிறார்

சென்னை, ஜூன். 4– ‘‘நாடக ரத்தினங்கள்’’ என்னும் தலைப்பில் இம்மாதம் 8ந் தேதி முதல் 14ந் தேதி வரை 7 நாட்களுக்கு ‘முத்ரா’வின் நாடக விழா தி.நகர், ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இன்போசிஸ் அரங்கில் நடைபெற உள்ளது. பிரபல நடிகை கலைமாமணி, குமாரி சச்சு குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். நாடகங்களிலும், சின்னத் திரையிலும் பிரபல நடிகர் ராம்கிக்கு ‘நாடக முத்ரா’ விருதை வழங்குகிறார். ‘முத்ரா’வின் தலைவரும் தொழிலதிபருமான நல்லி குப்புசாமி இந்த நாடக விழாவுக்கு தலைமை தாங்கி […]

செய்திகள்

‘‘இன்வெட்டர் மோட்டாருடன் புது ரக எல்.ஜி.சீலிங்ஃ பேன்’’

சென்னை, ஜூன் 4– டிவி, பிரிஜ், வாஷிங்மிஷின், ஏ.சி. போன்றவை தயாரிப்பில் முன்னணியில் உள்ள எல்.ஜி.எலக்ரானிக்ஸ் புதியதாக சீலிங்ஃபேன் அறிமுகம் செய்துள்ளது. இது குறைந்த மின்சாரத்திலும் ஓடும் இன்வெட்டர் மோட்டார் உள்ளது. அறையில் விரிந்து பரவி குளிர் காற்றை வீச எல்.ஜி.சீலிங் பேனில் இரட்டை இறக்கை கொண்ட ஃபேன் பிளேடு உள்ளது. இது பாதுகாப்பானது நீடித்து உழைக்க கூடியது. கவர்ச்சியான தோற்றத்தில் அனைவரையும் கவருகிறது. இதை ரத்னா பேன் ஹவுஸ் சேர்மன் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கிம்–வான்–கிம் அறிமுகம் செய்தார். […]

செய்திகள்

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 5 ஆண்டு எம்.ஏ. தமிழ் இலக்கியப் படிப்பு

சென்னை, ஜூன் 2– பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 5 ஆண்டு எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது, பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேரும் வகையில் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேர ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகத் […]

செய்திகள்

3 வெளிநாடுகளில் விண்வெளி ஆய்வுப் பயிற்சி: இந்தியாவிலிருந்து தேனி மாணவி மட்டும் தேர்வு

மதுரை, ஜூன்.4– தேனியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள விண்வெளி ஆய்வு பயிற்சிக்குத் தேர்வாகி உள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து இவர் ஒருவர் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு தேர்வாகி உள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். ஓவியர். இவரது மகள் உதய கீர்த்திகா. அல்லிநகரம் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மீதான ஈர்ப்பால், இவருக்கு சிறு […]