செய்திகள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: இணைய வழியில் 52 ஆயிரம் மனுக்கள்

சென்னை, செப்.14– வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின்படி, செல்லிடப்பேசி செயலி, இணையதளம் ஆகியவற்றின் வழியாக 52 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலமாக நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கான செல்லிடப்பேசி செயலி, டிஜிட்டல் இணைய சேவை மையங்கள், வாக்காளர் சேவை […]

செய்திகள்

நவராத்திரியை முன்னிட்டு நவசக்தி ஆலயங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா

சென்னை, செப். 13 நவராத்திரியை முன்னிட்டு நவசக்தி ஆலயங்களுக்கு, ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் உள்ள நவசக்தி ஆலயங்களுக்கு, ஒரு நாள் சிறப்பு சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நவராத்திரி ஒன்பது நாள்கள் மற்றும் விசேஷ நாள்களுக்கும் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் (திருவல்லிக்கேணி, டி1 […]

செய்திகள்

சென்னையில் நாளை 15 இடங்களில் குடிநீர் வாரிய குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை, செப். 13 சென்னைக் குடிநீர் வாரிய குறைதீர்க்கும் கூட்டம் நாளை (14 ந்தேதி) குடிநீர் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும் என வாரியம் தெரிவிக்கிறது. சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், திறந்தவெளிக் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான திறந்த வெளிக் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, […]

செய்திகள்

உலகிலுள்ள சுற்றுலா நகரங்களில் மிகவும் பாதுகாப்பானது சென்னை

சென்னை, செப்.13 உலகில் உள்ள சுற்றுலா நகரங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில், சென்னை முதலிடத்தில் உள்ளது என, கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் உள்ளிட்டோர் தெரிவித்தனர். உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பயர் பிராண்ட் லேப்ஸ், மென் திறன் வளர்ச்சி மையம் மற்றும், ராதா ஓட்டலின் அங்கமான பெதர்ஸ் நட்சத்திர ஓட்டல் ஆகியவை சார்பாக, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள, பெதர்ஸ் ஓட்டலில் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான […]

செய்திகள்

ஐதராபாத்தில் ஒரு லட்டு ரூ. 17.6 லட்சத்துக்கு ஏலம்

ஐதராபாத், செப். 13 21 கிலோ எடை கொண்ட லட்டு ஒன்று, ஐதராபாத்தில் ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்திற்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகருக்கு படைக்கப்படும் லட்டுகள் ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கு அங்குள்ள விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலத்தில் விடப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் இந்த லட்டு ஏலம் விடும் நிகழ்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற இந்த ஏலத்தில், 21 […]

செய்திகள்

பெரியார் சிலைக்கு 17–ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மாலை அணிவிக்கிறார்கள்

சென்னை, செப். 13 பெரியாரின் 141வது பிறந்தநாளையொட்டி வரும் 17 ந்தேதி அன்று சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாலை அணவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இதுகுறித்து அண்ணா தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாளான 17 ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை […]

செய்திகள்

எம்.ஜி.ஆர். பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு: அண்ணா தி.மு.க. ஆர்ப்பாட்டம்

புதுவை,செப்.13 – புதுவை சாலைக்கு எம்.ஜி.ஆர். சாலை பெயரை சூட்டவில்லை என்றால் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்னால் எனது உயரைத் தியாகம் செய்வேன் என்று அண்ணா திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் இன்று தெரிவித்தார். புதுவை 100 அடி சாலைக்கு எம்.ஜி.ஆர். சாலை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அப்பெயரை காங்கிரஸ் அரசு மாற்றி கருணாநிதி பெயரை சூட்டப்போவதாக அறிவித்துள்ளது. அதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள சாரம் பாலம் அருகே இன்று நடந்தது. அதில் […]

செய்திகள்

பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மாற்றம் செய்ய தமிழகம் முழுவதும் நாளை குடும்ப அட்டை குறைதீர் முகாம்

சென்னை, செப். 13– குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை 14–ந்தேதி அன்று காலை 10 […]

செய்திகள்

பரிக்கல் கிராமத்தில் இருக்கும் முதுமக்கள் தாழிகளை பாதுகாக்க நடவடிக்கை: ஆய்வாளர்கள் வேண்டுகோள்

விழுப்புரம்,செப்.13- விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் கிராமத்தில் இருக்கும் முதுமக்கள் தாழிகளை பாதுாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வேண்டுகேள் விடுத்துள்ளனர். விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் திருவாமாத்தூர் சரவணக்குமார், விழுப்புரம் விஷ்ணு ஆகியோர் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த முதுமக்கள் தாழிகள் அழிவில் விளிம்பில் இருப்பதுக் கண்டறியப்பட்டது. இதுபற்றி எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது- உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் கிராமத்தில் […]

செய்திகள்

சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

சென்னை,செப்.13– சென்னையில் ஆன்லைன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.53 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டில் தனியார் விடுதியில் தங்கியிருந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் 4 காவலர்கள் கொண்ட தனிப்படையினர் நேற்று இரவு அந்த விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர் கிரிக்கெட் ஈடுபட்டதில் ஈடுபட்டது தெரியவந்தது. […]